Friday, January 21, 2022

கிறிஸ்துவ மதம்

கிறிஸ்துவம் என்பது ஒரு கதை(புராண) வணக்க  மதம். கதையின் இஸ்ரேலில் வாழ்ந்து ரோமன் மரணதண்டனையில் இறந்து போன இயேசு என்பவரை தெய்வீகராக ஏற்று சர்ச் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் தன் வருமானத்தில் குறிப்பிட்ட பங்கை தரவேண்டும். தொடர்ந்து பலரையும் இந்த கதைக்கும் சர்ச்சிற்கும் விசுவாசமாக இருக்கும்படி மாற்றுவதை தொழிலாக செய்வேன் என ஏற்பதே கிறிஸ்தவ மதம்.

இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் 20ம் நூற்றாண்டில்  நடந்த தொல்லியல்  அகழ் ஆய்வு முடிவுகள் மற்றும் அமெரிக்கா ஐரோப்பாவில் நிகழ்ந்த பைபிள் ஆய்வுகள் பைபிள் கதைகள் முழுவதும் மனித கற்பனை கட்டுகதைகள்; அரசியல் ரீதியாக மக்களை அடிமை செய்ய புனையப்பட்ட  மனித கற்பனை என தெளிவாக இன்று பன்னாட்டு பல்கலைக்கழக அறிஞர்கள் ஏற்கின்றனர்.

இயேசு யூத பழமைவாத இனவெறியராக  யூதரல்லாத மக்களை  மனிதநேயமற்ற கீழ்த்தரமாக பேசி; உலகம் தன் வாழ்நாளில் அழியும் என கூறித் திரிந்து கடைசியில் மரண தண்டனையில் இறந்து போனார் என்பதே சுவிசேஷக் கதை.  சுவிசேஷக் கதைகளில் தான் யூதர்களுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன் என்றும் யூதர் அல்லாதவர்களை நாய் பன்றி என அருவருப்பாக பேசிய இயேசு மரண தண்டனையில் இறந்த பின்பு மீண்டும் பழைய உடம்பில் ஒரு சிலருக்கு மட்டுமே காட்சி கொடுத்ததால்;  பூமியில் மனிதன் இறந்து போக காரணமான ஆதாம் பாவம் போய்விட்டது என பவுல் என்பவர் உருவாக்கிய கட்டுக்கதை அடிப்படையில் எழுந்ததே கிறிஸ்தவ மதம்.

 இஸ்ரேலின் எபிரேயர்களுக்கு மட்டுமே; மற்றவர்களுக்கு அல்ல என்று யூத இனவெறி பேசி மரணமடைந்த இயேசுவை அனைத்து மக்களுக்கும் எனச் சொல்லி காசு சம்பாதிக்கும் வழியாக பவுல் உருவாக்கியதே கிறிஸ்தவ மதம்.  பவுல் தன் கடிதங்களில் உலகம் மிக வேகமாக அழியப்போகிறது கிறிஸ்துவின் நாள் எனும் தீர்ப்பு நாள் மிக விரைவில் உள்ளதால் இப்பொழுது வாழ்பவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் திருமணம் ஆனவர்களும் உடலுறவு கொள்ள வேண்டாம் என்று போதித்தார்.

இறந்த மனிதன் இயேசு எந்த அதிசயமும் செய்யவில்லை மரண தண்டனையில் இறந்து போனார் என்று மிகத் தெளிவாக பதில் கடிதம் காட்டுகிறது. ஆனால் சுவிசேஷக் கதாசிரியர்கள் இறந்த மனிதன் இயேசு அதிசயம் செய்ததாக புனைந்து அவரை தெய்வீகராக்கி கட்டுக்கதை உருவாக்கியுள்ளனர்.  அதிசயக் கதைகளை நாம் பார்த்தால் ஒரு சுவிசேஷக் கதையில் சொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முறை -இடம் எல்லாமே வேறொரு சுவிசேஷத்தில்  பெரும்பாலும் மாற்றப் பட்டுள்ளது.  இவை எதுவுமே உண்மை இல்லை என்பது நடுநிலை வகிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா