Wednesday, January 19, 2022

மதம் மாற வற்புறுத்தியதால் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை மரண வாக்குமூல காணொளி

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் மனைவி கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது 17 வயது மகள் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் படித்து வருகிறார். அருகில் உள்ள செயின்ட். மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, படித்து வந்தார். 



இந்நிலையில், கடந்த 9-ம் மாணவி வாந்தி எடுத்துள்ளார். தனக்கு வயிற்று வலி என்று மாணவி கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதும், அவர் வந்து மகளை அழைத்துச் சென்று விட்டார்.

 
கடந்த 15-ம் தேதி மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்களிடம், தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்யவேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலினால் பூச்சி மருந்து குடித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.




உடனடியாக இதுகுறித்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், திங்கட்கிழமை முருகானந்தம் தரப்பினர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் வந்து விடுதி வார்டன் மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாக கூறி கூச்சலிட்டனர்.
                                                 


https://newstm.in/tamilnadu/depression-due-to-being-told-to-change-religion-plus-2-stud/cid6270508.htm 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர், வார்டன் சகாயமேரி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


https://www.malaimurasu.com/posts/crime/Father-and-two-daughters-commit-suicide-by-jumping-into-well-after-angry-with-wife?fbclid=IwAR1fMczBSseoJxZi1HQPxhnCPbb5DGKqZyt3UTShZP68lSwR9jkjPGjl5T0











 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...