Monday, January 17, 2022

குழந்தைகள் வாயில் அருவருப்பாக ஈ.வெ.ராமசாமியார் வழியில் பேச வைத்து தன் அரிப்பை சொரிந்த Zee TV நிகழ்ச்சி

மிகவும் கீழ்த்தரமான திராவிடியார் ஈ.வெ.ராமசாமியார் வழியில் மனித நேயமற்ற அருவருப்பாக குழந்தைகள் வாயில் பேச வைத்து தன் அரிப்பை சொரிந்த நிகழ்வு
 
நேற்று இந்த பிரச்சனையை திடீரென்று அப்படியே போட்டுவிட்டு குடியரசுதின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை நோக்கி ஓடி விட்டார்கள்.
அதற்கான முக்கிய காரணம் இங்கு சட்டம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்திருக்கிறேன். இது கிட்டத்தட்ட ஐம்பது பக்கம் உள்ள சட்ட வரைவு. யாருக்காவது வேண்டும் என்றால் என்னுடைய வாட்ஸப்புக்கு வரவும்

இதுபோல டிவி நிகழ்ச்சியில் நடிக்கும் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ப தான் டயலாக் பேச வேண்டும் என்றும் தன் வயதுக்கு மீறிய டயலாக் பேசி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டால், அந்தக் குழந்தைக்கே டயலாக் சொல்லிக் கொடுத்தவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் பொறுப்பாளர் என்று அனைவரையுமே சட்டப்படி தண்டிக்க முடியும்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?? மீடியா என்கிற பவரை காட்ட முடியாமல் நேற்று கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்ற Zee TV நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை பற்றி.
சட்டம் எனும் ஆயுதத்தை சரியானபடி கையில் எடுத்து விட்டால் எப்பேர்பட்ட குரங்கானாலும் ஆடித்தான் ஆக வேண்டும்..


அண்ணாமலையை இவர்கள் ஏதோ சாதாரணமாக எடை போட்டு விட்டார்கள். அவருக்கு ஒரு சட்டத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரியாதா??
இவனுங்களுடைய புலம்பல் ஏனென்றால் இதை ஒரு பெரிய முன்னுதாரணமாக காட்டி இனி பெற்றோர்கள் குழந்தைகளை இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். இவர்களுடைய வன்மத்தை இனி குழந்தைகள் மூலமாக கக்க முடியாது.
இவை எல்லாவற்றையும்விட முக்கியம் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் ஷூட் செய்பவர்கள் என்று அனைவருக்குமே இந்த குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை நினைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வேர்த்து விடும்.
அதனால்தான் வழக்குப் போடும் வரை உச்சஸ்தாயில் கத்தி கொண்டு இருந்தவர்களுக்கு வழக்குப்பதிந்து அதற்கான சாராம்சம் வெளியில் வந்தவுடன் நவதுவாரங்களும் அடைத்துக் கொண்டது.
அவ்வளவுதாங்க கணக்கு...
சரவணபிரசாத் பாலசுப்ரமணியன்


 


  

 

 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...