Friday, January 28, 2022

மணிமேகலை எழுதப்பட்ட காலம் - Tamil wiki

 மணிமேகலை (காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

மணிமேகலை எழுதப்பட்ட காலம்[தொகு]

மணிமேகலை எழுதப்பட்ட காலம் குறித்து இக்கட்டுரையில் தரப்படுகின்ற விளக்கத்துக்கு என்ன ஆதாரம் உண்டு என்பதைப் பயனர் சுட்டிக்காட்டவில்லை. ஆதாரம் தெரிந்தவர்கள் அதை இணைத்தால் நல்லது.--பவுல்-Paul (பேச்சு) 01:04, 10 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

இக்கட்டுரையின்படி புகார் நகரம், மணிபல்லவத் தீவு முதலாவை கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இருந்தன. இடைக்காலச் சோழர், சாளுக்கியச் சோழர் ஆட்சிக்குப் பின்னர் மணிமேகலையும் அவளுக்கு அறிவுரை கூறிய அறவண அடிகளும் வாழ்ந்தார். என்ன விந்தை! இதுதான விக்கிப்பீடியா. கேட்க யாருமே இல்லை எனின் எனக்குமட்டும் என்ன? --Sengai Podhuvan (பேச்சு) 22:10, 19 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

கட்டுரையில் இருந்து நகர்த்தப்பட்டது[தொகு]

அது இயற்றப்பட்ட காலமாக ஆய்வாளர்கள் 3ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுவரை கூறிவருகின்றனர். மணிமேகலை காப்பியத்தினை அண்மையில் ஆராய்ந்திருந்த செங்கைப் பொதுவன் அதன் காலத்தினை பின்வருமாறு ஆராய்ந்துள்ளார்:

  • மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. [1] மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
  • சைவ, வைணவ இலக்கியங்களில் காலத்தால் முந்தியவை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியவை. இவற்றில் காலத்தால் முந்திய இலக்கியங்களைப் பாடிய அப்பரோ, முதலாழ்வார்களோ புகார் நகரம் பற்றிக் குறிப்பிடவில்லை. இரட்டைக் காப்பியங்கள் புகார் நகர நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. எனவே இவை ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தியவை.
  • கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.[2] இந்தக் கயவாகு காலம் கி.பி. 171-193 [3]
  • தேவாரம்திவ்வியப் பிரபந்தம்கம்பராமாயணம்சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [4] நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை. [5]
  • எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
  • மணிமேகலை காப்பியத்தில் வரும் அறவண அடிகள் என்னும் புத்த துறவி புத்தர் மீண்டும் கி.பி. 1073-ல் பிறப்பார் என முன்கூட்டியே கணிக்கிறார். இது நிகழ்ந்ததா என்பது ஒருபுறம் இருக்க இதனைக் காப்பியத்தின் காலம் எனல் பொருந்தாது.

ஆனால், அதன் காதை - 12, வரி- 72 முதல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

‘சக்கரவாளத்துத் தேவரெல்லாம்
தொக்கொருங்கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் வீழ்ந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து
விரிகதிர்ச் செல்வன் தோன்றினனென்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேரறிவாளன் தேன்றும் அதற்பிற்பாடு
பெரும் குளமருங்கிற் சுருங்கைச் சிறுவழி
இரும் பெரும் நீத்தம் புகுவதுபோல
அளவாச் சிறு செவி அளப்பரும் நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்

இதில், இறந்து, துடித லோகத்திற்குச் சென்றிருந்த புத்தபெருமான் ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டில் மீண்டும் பூமியில் அவதரித்து, நல்லறம் மீண்டும் நிலைநாட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மணிமேகலை காப்பியமானது பௌத்த காப்பியமாகையாலும், அதன் ஆசிரியனுக்கு வான சாஸ்த்திரம் நன்கு தெரிந்த நிலையிலும், ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டானது, பௌத்த ஆண்டாகவே இருக்கமுடியும்.

பௌத்த ஆண்டு ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆனது, பொது சகாப்தம் (1616 - 543) 1073 ஆகும். புத்தபெருமான் பொது சகாப்தத்திற்கு 543ஆண்டுகள் முன்னர் இறந்ததென்பதே, தமிழ், இலங்கை மரபு.

ஆகவே பொது சகாப்தம் 1073ஆம் ஆண்டில், பௌத்தம் எங்கு நிலைகுலைந்திருந்து மீண்டும் உயிர் பெற்றிருந்தது என்பது முக்கிய கேள்வியாகிறது.

இங்குதான் இலங்கையின் பௌத்த வரலாறு முக்கியமாகிறது. இலங்கையில், 70 வருடங்கள் வரையான சோழ மேலாதிக்கத்தின்கீழ் பௌத்த சங்கமும், பௌத்தமும் நிலைகுலைந்து இருந்தன என்றும், தொடர்ச்சியான போரினைத் தொடர்ந்து, பொது சகாப்தம் 1070ஆம் ஆண்டில்தான் முதலாவது விஜபாகுவின் தலைமையின்கீழ் சோழர் மேலாதிக்கம் முழுமையாக முறியடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதன் பின்னர் முதலாவது விஜயபாகு புத்தபெருமானின் தந்ததாது வைக்கப் பொலநறுவவில் கோயிலையும் கட்டி, பௌத்த சங்கத்தையும் புனரமைத்து, தன்னை 1073ஆம் ஆண்டில்தான் இலங்கையின் பௌத்த அரசானாக முடிசூடிக்கொண்டான் என்பதைப் பொலனறுவ தமிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.

இந்தநிலையில், மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1073 இற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கமுடியாது.

அது குறிப்பாக எந்த ஆண்டில் இயற்றப்பட்டிருக்க முடியும் என்பதை அறிய, புத்தபெருமான் பொது சகாப்தம் 543ஆம் ஆண்டில்தான் இறந்தார் என்பது என்ன அடிப்படையில் வரப்பட்டது என்பதை ஆராயந்தறியவேண்டும்.

இந்த ஆண்டானது இலங்கையின் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில்தான் வரப்பட்டிருக்கமுடியும். இந்தநிலையில், புத்த பெருமான் இறந்ததின் பின்னரான 1000, 2000 ஆண்டுகளில் இலங்கையில் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்தால், புத்தபெருமான் இறந்து 2000ஆண்டுகளின் பின்னர், அதாவது பொது சகாப்பதம் 1457ஆம் ஆண்டில்தான், யாழ்ப்பாண இராச்சியம் சப்புமல் குமாரயவினால் கைப்பற்றப்பட்டு, இலங்கை முழுவதும் ஆறாவது பராக்ரமபாகுவினால் ஒரு குடைக்கீழ் கொண்டுவரப்பட்டது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், புத்தபெருமான் இறந்த ஆண்டானது யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்னராக வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.

  1.  மலையாள மொழி
  2. அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
    பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
    குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
    கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
    ‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
    நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
    வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட (சிலப்பதிகாரம், வரந்தரு காதை 157-163)

  3.  கயவாகு
  4.  'ஏ' என்னும் அசை கொண்டு முடியாமல் 'என்' என்னும் அசை கொண்டு முடியும் ஆசிரியப்பா
  5.  கி.பி. 6 ஆம் நூற்றாண்டினதாகக் கணிக்கப்படும் பெருங்கதை என்னும் நூலைத் தவிர வேறு எந்தக் காப்பியமும் ஆசிரியப்பாவால் அமையவில்லை.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...