Friday, January 7, 2022

இயேசு தேவகுமாரன் என்பது பைபிள்படியே தவறு

கிறிஸ்தவ பைபிள் கதைகளின் நாயகன்  இயேசுவை தேவகுமாரன் என்பதாக கிறிஸ்தவ சர்ச்சுகள் கதை பரப்புகிறது.  ஆனால் இயேசு தன்னை அப்படி சொல்லி கொண்டதாக முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒத்த கதை சுவிசேஷக் கதைகளில்  இல்லவே இல்லை.

தேவகுமாரன் என்ற வார்த்தை புனிதமான மனிதன் என்ற அர்த்தத்தில்தான் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இயேசுவே பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் கீழ் உள்ள வசனங்களில் பார்ப்போம்.

ரோமன் மரணதண்டனையில் இறந்துபோன மனிதன் இயேசுவை வணங்குவது அறிவற்ற செயல் என்பதை சிந்தனையாளர் அனைவரும் ஏற்கின்றனர்.

 

இஸ்ரேலில் எபிரேய (ஹீப்ரூ) மொழி பேசும்  யூதர்கள் தங்கள் தொன்மை வரலாறு என புனைந்த பைபிள் கதைகளில் அந்த தேவ கதாபாத்திரம் பேசியதாக உள்ளவை

தாவீது ராஜா,  தாவீது வீரன் உரியாவின் மனைவியை கைப்பற்றி அவரிடம் பெற்ற மகன் சாலோமோன் இருவரையும் தன் மகன் என இஸ்ரவேலின் தேவன் கர்த்தர் கூறியதாக உள்ள கதை வசனங்கள்

சங்கீதம் 2:7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.     கர்த்தர் தாவீதிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!     நீ எனக்கு மகன்".

1 நாளாகமம் 22: 10 ல் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். சாலோமோன் எனது மகனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.  

 இஸ்ரேலியர் அனைவருமே பைபிள் கதை தெய்வத்தின் முதலான குமாரர்கள்

யாத்திராகமம் 4:21 மோசே எகிப்தை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டு  இருந்தபோது, தேவன் அவனோடு பேசினார். 22  அப்போது நீ பார்வோனைப் பார்த்து, ‘இஸ்ரவேல் எனது முதற்பேறான மகன்.  

யூதர் அல்லாத பிற ஜாதியை சேர்ந்த பாரசீக ராஜா கோரேசுவை தன்னுடைய மேய்ப்பர் என பைபிள் கதை தெய்வம் சொன்னதாம்   

ஏசாயா 44: 28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.     நான் விரும்புவதை நீ   செய்வாய்.  

  

சாயா 45:1 “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள் வேன்.    அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன்

மத்தேயு 5:44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். 

மத்தேயு 5:9 அமைதிக்காகச் செயல்    ற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.     தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார். 


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா