Tuesday, August 9, 2022

நாகூர் தர்காவில் மொஹரம் தொழுகை சர்ச்சை


மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை

ஆக 10, 2022  நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3096668

 
நாகை அடுத்த நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது.பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்.இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.


முஹர்ரம் தகதிமிதா..தா ...தா..
முஹம்மதின் இன்ஷா அல்லாஹ் கோவிந்தா ஆன கதை !
இஸ்லாம் என்பது அனைத்தும் முழுமை பெற்ற மார்க்கம் என்பது முல்லாக்களின் திருவசனங்கள் ஆனால் எதார்த்தத்தில் குர்ஆனும் ஹதீஸும் சொல்வது அபத்தமான வாதங்கள்.
/அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).
இந்த வசனத்தின் படி அல்லாஹ்வின் தீர்ப்பு அனைத்து பிரச்சனைகளுக்கும் இருப்பதாக கூறுகிறது .ஆனால் அல்லாஹ்வின் சட்டம் என்பது முந்தைய அல்லாஹ்வின் தோரா ,இஞ்சில் போன்றவற்றில் உள்ள சட்டங்களை மறுப்பதாகவும் இருக்கிறது குரான் நவீன சட்டங்களை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
(நிற்க)
/அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும்.(9:36)
மாதத்தின் எண்ணிக்கை எத்தனை? பன்னிரெண்டு எண் வரிசையில் 12ஆக இருக்கிறது என்றால் அவை ஒவ்வொன்றுக்கும் பெயரும் இருக்கவேண்டும் அல்லவா? எது முதல் மாதம் எதுநடு மாதம் எது கடைசி மாதம் என்ற வரிசை முறையும் வேண்டும் அல்லவா? நீங்க குப்புற படுத்து குர்ஆனில் தேடினாலும் 12 மாதங்களுக்கான எந்த பெயர்களையும் உங்களால் அறிய முடியாது வரிசைப்படி. ஆனால் அதே குர்ஆன்
"..உம்முடைய இறைவன் மறப்பவனல்ல’ (திருக்குர்ஆன் 19:64)
என்கிறது எதையுமே மறக்காத அல்லாஹ் ஏன் மாதங்களின் 12 பெயர்களையும் அதன் வரிசைகளையும் கூறவில்லை?
//முஹர்ரம் மாத்தின் 10 ஆம் நாள் அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கும் தினமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். மதீனா வந்த போது (அத்தினத்தில்) தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். றமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் எனக் கூறினார்கள்’ (அறி: ஆயிஷh(ரழி), ஆதா: புஹாரி: 6074, முஸ்லிம்:1125, அஹ்மத்:50, 162, 243)
இங்கே நாம் கவனிக்க வேண்டியது முகம்மது 13 ஆண்டு காலம் மக்காவில் இருந்திருக்கிறார் அப்போது 13 ஆண்டு காலமாகவும் அவருக்கு மூசாவை பற்றி எதுவும் இறைவன் கொடுக்கப்படவில்லை மதினாவிற்கு வந்து யூதர்களை பார்த்து அவர்கள் நோன்பு நோற்பதை கண்டு விட்டுதான் அவர் கையில் எடுத்திருக்கிறார் மேலும் இதனை வைத்து தானும் ஒரு நோன்பு என்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறார் உண்மையில் நோன்பின் கலாச்சாரம் பசித்திருப்பது தனித்திருப்பது விழித்திருப்பது என்ற கருத்தில் கொண்டது அல்ல கொள்ளையடிக்க போகும்போது வயிற்றுக்கு தேவையான நேரத்தில் உணவு உண்ண முடியாது அதனால் காலை 4 மணிக்கு உண்டு முடித்துவிட்டு விடியற்காலையில் கொள்ளை அடிக்க செல்கிறார் மீண்டும் மாலையில் மறுபடியும் உணவை தொடங்குகிறார். மக்காவில் கொள்ளையடிக்க வாய்ப்பில்லை அதனால் அங்கே நோன்பு நோற்க தேவையும் இல்லை .
நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் 10 ஆம் தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்க ஏவிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே! என்று கூறினார்கள். எதிர்வரும் ஆண்டில் இன்ஷா அல்லாஹ் 09 ஆம் நாளும் நோற்போம் எனக் கூறினார்கள். அடுத்த வருடம் முஹர்ரம் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள்’ (அறி: இப்னு அப்பாஸ்(ரழி) , ஆதா: முஸ்லிம்:1134, அபூதாவுத்: 2445)
இந்த இடத்தில் மற்றுமொரு முக்கியமான அம்சம் உணர்த்தப்படுகின்றது. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக 09 உம் 10 உம் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள். என்று முல்லாக்கள் அளந்து விடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம் மாறு செய்வது என்பது என்ன நான் ஒரு இட்லி நாப்பிட்டால் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடுவது தான் மாறு செய்வதா? யூதன் வட்டி வாங்கினான் நான் வாங்க மாட்டேன் என்றால் அது மாறு செய்வது யூதன் 5%வட்டி வாங்கினால் நான் 10% வட்டி வாங்குவேன் என்பது மாறு செய்வதா அல்லது அவனை விட அதிகமாக செய்வதா? இங்கே முஹம்மது பிறை 9திலும் நோன்பு நோற்று யூதனுக்கு மாறு செய்வதாக சபதம் செய்வதாகவே வைத்துக்கொள்வோம் ஏன் இறந்துப்போனார் ? அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் இறுதித்தூதரை நோன்பு நோற்க விடாமல் மரணிக்கவைத்தது அல்லாஹ்வா ?ஷைய்த்தானா? முஹம்மதின் இன்ஷா அல்லாஹ்வுக்கே அல்லாஹ் அல்வா கொடுத்து விட்டான் என்றால் இன்றைய ஈமாந்தாரிகளின் நிலை ?
சாதிக் சமத்

பண்டிகை ,திருநாள் ,கொண்டாட்டங்கள்.
முஹர்ரம் மாதத்தில் கர்பலா யுத்தம் பற்றி நினைவூட்டும் வகையில் அலியின் அஹ்லுல் பைத்தினர்(ஷியாக்கள்) தீமிதி ,கத்தியால் உடலை கீரிக்கொள்ளுதல் போன்ற சுய துன்புறுத்தல்களை நிகழ்த்துவார்கள் அதை அபுபக்கரின் அஹ்லுல் பைத்தினர் (ஸூன்னிகள்) எதிர்ப்பார்கள் உண்மையில் இது பண்டிகையோ துக்கமோ அல்ல மாறாக இஸ்லாமிய அரசியல் சூழ்ச்சியை நினைபடுத்துவதாகும் சூழ்ச்சி செய்த கொலைக்காரர்கள் அபுபக்கர் பைஅத்தினர் (ஸுன்னிகள்)என்பதால் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட திருவிழாக்கள் துக்கங்கள் கொண்டாடுவது இல்லை என்று பரப்புகிறார்கள் ஆனால் அதே ஸுன்னிகள் முஹம்மது இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடிய ஹிஜ்ரத்தை இன்றும் நினைவு கூர்ந்து அதையே இஸ்லாமிய ஆண்டாகவும் கொண்டாடி புகழ்ந்து வருகிறார்கள் .
அனைத்துமதங்களும் பண்டிகை கொண்டாட்டங்களை எதோ ஒரு மூடநம்பிக்கையை முன் வைத்து கொண்டாடி வருகிறது ஆனால் குரானில் பண்டிகைகள் கொண்டாடவேண்டும் என்ற வழிகாட்டலும் இல்லை என்பது தான் உண்மை காரணம் முஹம்மது கொள்ளையடிப்பதற்காகவே ஒரு மார்க்கதை உருவாக்கினார் அங்கே கொள்ளையடிக்கும் வழிமுறை ,கொலை செய்யும் வழிமுறை, பங்கு பிரிக்கும் வழிமுறைகள் கொள்ளையிட்டதை திருடாமல் இருக்க சட்டங்கள் பல மனைவிகள் இருப்பதால் கள்ள காமத்தை தடுக்க விபச்சார தடுப்பு சட்டங்கள் என சுய தேவைகளுக்காக ஒரு வட்டத்தை உருவாக்கினாரே தவிர வேறெதுவும் இல்லை மற்றவைகள் முஹம்மதுக்கு பின் வந்தவர்கள் உருவாக்கிவைகள் அவைகள் அவரவர்கள் பெயரிலேயே இருக்கிறது ஹனிஃபா உருவாக்கிய ஹனஃபி ,ஷாஃபி உருவாக்கிய ஷாஃபி என நீளுகிறது .
கர்பலா என்பது முஹம்மதின் சம்பந்திகள் உறவுகளுக்கும்(அபுபக்கர், உமர்,உஸ்மான் கூட்டத்தினர்) முஹம்மதின் இரத்த உறவான அலி ,ஃபாத்திமா ,ஹசன் ஹூசைன்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நீண்ட துரோக வரலாறு ஆகும் . ஷியாக்களின் சோக முஹர்ரம் நினைவுக்கூறதக்க ஒன்று இல்லாவிட்டால் இஸ்லாத்தின் கோரமுகம் தெரியாமல் போய் விடும்
சாதிக் சமத்

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி