போலி முற்போக்குகளின் நேர்மையற்ற போக்கும்!
--------------------------------------------------------------------
ஆவணங்களுக்கு நன்றி:
பூமொழி, மனித உரிமைச் செயல்பாட்டாளர்.
------------------------------------------------------------------
சேலத்தில் தாதகாப்பட்டி கேட், சண்முகா நகர்,
சிங்கார முனியப்பன் கோவில் அருகே ஒரு பன்றி
இறைச்சிக் கடை இருந்து வந்தது. கந்தசாமி,
பழனிச்சாமி என்னும் இருவர் அக்கடையை
நடத்தி வந்தனர்.
இஸ்லாமிய மதவெறியர்கள் பன்றி இறைச்சிக் கடை
இருக்கக் கூடாது என்று மூர்க்கத் தனமாக எதிர்ப்புத்
தெரிவித்தனர். எனவே சேலம் மாநகராட்சி
2018ல் பன்றி இறைச்சிக் கடைக்குத் தடை விதித்தது.
பன்றி இறைச்சிக்கடை மூடப்பட்டது. அக்கடை
மூடப்பட்டு தற்போது நான்காண்டுகள் ஆகின்றன.
என் தட்டு என் உணவு, என் உரிமை என்றெல்லாம்
போலியாக முழக்கமிடும் எந்த ஒரு போலி
முற்போக்குக் கழிசடையும் பன்றி இறைச்சிக்
கடையை மூடியதை எதிர்த்துக் குரல்
கொடுக்கவில்லை.
மேலேகூறிய அதே இடத்தில் (சண்முகா நகர்,
சிங்கார முனியப்பன் கோவில் அருகில்) ஒரு
மாட்டு இறைச்சிக்கடை (beef chillie shop) நடந்து
வந்தது. பாதுஷாமைதீன் என்னும் இஸ்லாமியர்
அக்கடையை நடத்தி வந்தார். மாட்டிறைச்சிக்
கடையை அனுமதிக்கக் கூடாது என்று இந்து
முன்னணி போராடியது. போராட்டம்
தீவிரமானதும், சேலம் மாநகராட்சி தற்போது
2022ல் மாட்டிறைச்சிக் கடைக்குத் தடை
விதித்துள்ளது.
பன்றி இறைச்சிக் கடைக்குத் தடை 2018ல்.
அதன் பிறகு நான்காண்டுகள் இந்து முன்னணி
போராடிய பிறகு, மாட்டு இறைச்சிக்
கடைக்குத் தடை. 2022ல்.
தமிழ்நாட்டின் போலி முற்போக்குகள், போலி
இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி
மாவோயிஸ்டுகள் என்று சகல தரப்பையும் சேர்ந்த
போலிகள் பன்றி இறைச்சிக் கடைக்குத் தடை
விதித்ததை எதிர்க்கவில்லை.
என் தட்டு, என் உணவு, என் உரிமை என்று முழங்கிய
கனிமொழியோ, மனுஷ்ய புத்திரனோ, இன்னும்
நாடறிந்த போலி முற்போக்குகளோ, அன்றைக்கே
2018ல் பன்றி இறைச்சிக் கடைக்குத் தடை கூடாது
என்று குரல் கொடுத்திருந்தால், இந்து முன்னணிக்கு
இன்று மக்களிடையே ஆதரவு ஏற்பட்டு இருக்குமா?
No comments:
Post a Comment