Tuesday, August 16, 2022

சர்ச் வரும் மாணவனை ஓரினச்சேர்க்கை வன்கொடுமை பாதிரி கைது

எப்போ சர்ச்சுக்கு வந்தாலும் விடாமல் பாதிரியார் ஓரினச்சேர்க்கை! வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறிய சிறுவன்.!

சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கொடியன் (63). அருகிலுள்ள உள்ள வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் சர்ச்சுக்கு வரும் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் பாதிரியார் ஜோசப்பின் தொல்லை அதிகரித்தது. 


இது குறித்து அந்த சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறுவனுக்கு ஓயாமல் டார்ச்சர் கொடுத்த பாதிரியார் ஜோசப் கைது செய்யப்பட்டார். 

 https://tamil.asianetnews.com/crime/boy-threatened-with-homosexuality-priest-arrested-rgorxd

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...