Monday, August 22, 2022

மாதவரம் பெராக்கா சட்ட விரோத கூச்சல் ஜெப சர்ச் சீல் வைத்து மூடப்பட்டது ,

சட்ட விரோதமான கிறிஸ்துவ சபை மாதவரம் பெராக்கா கூச்சல் ஜெபச் சர்ச் கட்டடத்திற்கு சீல்  வைத்து மூடப்பட்டது 

மாதவரம், அனுமதி பெறாத கிறிஸ்துவ சபை கட்டடத்திற்கு, சென்னை மாநகராட்சி நிர்வாகம், 'சீல்' வைத்தது.சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த எம்.எம்.காலனி, கே.கே.தாழை பகுதியில், பெராக்கா ஏ.சி.ஏ., ஜெபவீடு உள்ளது.

சென்னையில் கார்ப்பரேட் சாமியார் மடம் எந்த ஒரு அனுமதியின்றி 6 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள், ஏரிக்கரை ஆக்கிரமிப்பு

 

  அதில், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள், வழிபாடு செய்து வந்தனர்.இந்த நிலையில், அந்த சபைக்கான கட்டடம், மாநகராட்சியின் கட்டட அனுமதி பெறாமல் விரிவாக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், சபை நிர்வாகத்தினர் தங்கள் பொருட்களை அகற்றிக்கொள்ள, கால அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்கினர்.

வெள்ளியங்கிரி மலை- காடு அழித்து நொய்யல் நதி, சிறுவாணி ஆற்றுப் படுகையில் விதிகளை எல்லாம் மீறி சிமென்டு காங்கிரிட் வன காருண்யா கல்லூரி

  ஆனால், அந்த கிறிஸ்துவ சபையினர், கால அவகாசம் முடிந்தும், அலட்சியம் காட்டியதால், நேற்று காலை, 10:00 மணி அளவில், மாதவரம் மண்டல அதிகாரிகள், மேற்கண்ட கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.அப்போது, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த, மாதவரம் பால்பண்ணை போலீசார், அவர்களை அகற்றி, மாநகராட்சியின் பணிக்கு உதவினர்.     

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...