Monday, August 22, 2022

PTR பழனிவேல் தியாகராஜன் படித்தது என்ன?

PTR பழனிவேல் தியாகராஜன் படித்தது என்ன? விஜயராகவன் கிருஷ்ணன்

 திரு .பழனிவேல் தியாகராஜன் - நமது நிதி மந்திரி அவர்கள் ... நீ பொருளாதாரம் - நிதி துறை பற்றி படிச்சு இருந்தால் என்னிடம் கேள்வி கேளு - இல்லையென்றால் ஓடிப்போ என்று சவுண்ட் விட்டது அனைவரும் அறிவோம் ..

நேற்றையில் இருந்து இவரின் படிச்ச படிப்பை தேடி பார்த்தேன் ...
1 . இவர் பிஈ கெமிகல் எஞ்சினீரிங் - திருச்சி - அன்றைய காலத்தில் REC (Regional Engineering College , trichy ) now it is called NIIT ( National Institute of Technology, ) படித்து இருக்கிறார் - நிச்சியமாக இது நிதி மேலாண்மை - பொருளாதாரம் பற்றிய படிப்பு இல்லை !!!
2. a master's degree in operations research - (செய்பணி ஆய்வியல்) இந்த படிப்பு - ஒரு மேலாண்மை அமைப்பு - புள்ளி விவரங்கள் மற்றும் கணித மாதிரிகளை கொண்டு ஒரு குழுமத்தில் முடிவுகளை எடுக்க பயன்படும் படிப்பு -
ஒரு ஹோட்டல் இல் சனிக்கிழமை மாலை - கும்பல் எவ்வளவு வரும் - போன வாரம் எவ்வளவு வந்தது - என்ன என்ன பொருள் சாப்பிட கேட்டார்கள் என்பதை ஒட்டி - அதே போல பொருள்களை வாங்கி வைப்பது என்று ஒரு உதாரணமாக சொல்லலாம் - இதுவும் - நிதி மேலாண்மை / பொருளாதாரம் பற்றிய படிப்பு இல்லை !!!
3. completed his MBA in financial management at MIT Sloan School of Management. - ஆம் இது அவரின் நிதி மேலாண்மை பற்றியதுதான் என்று இருந்தாலும் .. ஒரு சின்ன விசயம் ..
இந்த MIT sloan school - ஒரு தனியார் நடத்து கல்லூரி - இதில் பெரும்பாலான படிப்புகள் - (https://en.wikipedia.org/wiki/MIT_Sloan_School_of_Management) - Executive education என்கிற வகையில் - வழங்கப்படுபவை என்று சொல்லுகிறார்கள் !!!
அது என்ன - Executive education ???
"Executive education (ExEd or Exec. Ed) refers to academic programs at graduate-level business schools for executives, business leaders and functional managers globally. These programs are generally non-credit and non-degree-granting, but sometimes lead to certificates and some offer continuing education units accepted by professional bodies and institutes. Estimates by Business Week magazine suggest that executive education in the United States is approximately an $800 million annual business with approximately 80% provided by university-based business schools"
காசு இருந்தா - பணக்காரன் வீட்டு பசங்களுக்கு பட்டங்களை அளிக்கும் தனியார் பல்கலைக்கழங்கள் - அதில் மிக சிறப்பானது - இந்த MIT Sloan School of Management - என்று விக்கிபீடியாவே சொல்லுது !!
எதோ ஒன்னு எதோ அமெரிக்காவில் சென்று ஒரு பொருளாதார முதுகலை பட்டம் வாங்கி விட்டார் ..
ஊரில் இருந்து தொடர்ச்சியாக பணம் அனுப்பும் வசதி இருந்த படியால் - இவர் அதற்க்கு மேலும் முனைவர் பட்டம் - PhD - வாங்கி விட்டார் ..
அது என்ன என்று பார்த்தா ... கம்ப்யூட்டரில் உள்ள விசயங்களை மனிதர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்று ஒரு 18 பெயர்களுக்கு கேள்வி எழுதி குடுத்து அதை பற்றி ஒரு ஆய்வு அறிக்கை !! - கீழே சென்று பாருங்க -
Thiagarajan Palanivel, Individual differences in information processing: Implications for interface design (Co-Advisor with Dr. Martin Helander) Department of Industrial Engineering, SUNY at Buffalo, December 1994. (Current position: Consultant,
Ergonomics Research, Inc.) <= he worked in this company when some one quoted this paper !!
1996 இல் கம்ப்யூட்டர் மனித தொடர்பு பற்றிய ஆய்வுக்கும் இன்றைக்கு இருக்கும் கால நிலைக்கும் - நிலக்கரி வண்டியின் பெருமைகள் பயன்களை கூறு என்று வினாத்தாள் போல இருக்கு - இந்த ஆய்வு !!!
எதோ மண்டபத்தில் யாரோ எழுதி குடுத்த மாதிரி இருந்தா நான் பொறுப்பில்லை - இந்த இவரின் ஆய்வு கட்டுரையை நான் இன்று காலையில் இருந்து பல வழியில் தேடி கண்டு பிடித்தேன் !!!
==================================
இவர் தன்னை பற்றி பேசி கொள்கிற மாதிரியான படிப்பு எதுவும் அவரிடம் இல்லை - என்றே நான் நினைக்கிறேன் !!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A. (Corporate Secretaryship ) படிச்சு விட்டு உலக பொருளாதாரதை பற்றி இந்த திண்ணையில் பிட் பிட்டாக எழுதும் நான் ஒரு பொருளாதார மேதை என்று சொன்னால் எப்படி நீங்க மனதுக்குள் சிரிப்பீர்களோ - அதேதான் இவரின் நிலைமையும்
பாவம் .. என்னை மன்னித்து என் எழுத்துக்களை படிப்பது போல அவரையும் ரசியுங்க ரசியுங்க; சிரியுங்க
விஜயராகவன் கிருஷ்ணன்


வருச நாட்டு ஜமீன் கதை - 43

 வடவீர பொன்னையா 

வருச நாட்டு ஜமீன் கதை - 43மைனர் ண்டியருக்குத் தூக்கம் தொலைய ஆரம்பிச்சது.

https://www.vikatan.com/arts/literature/varusha-nattu-jameen-kadhai-series-episode-43

திடீர்னு நடுச்சாமத்துல எந்திரிச்சு படுக்கைல உக்காந்து தன்னோட கை விரலயே பாத்துக்கிட்டிருந்தாரு. விரல் சரியா மடங்காம உள்ளுக்குள்ள எதுவோ இழுத்துப் பிடிச்சுக்கிட்ட மாதிரி உணர்ந்தாரு. விரல நீவிக்கிட்டே உள்ளங்கையப் பாத்தாரு.

அப்போதான் மைனருக்குத் தன்னோட தாயார் ஞாபகம் வந்துச்சு. நல்லா தூங்கிக்கிட்டிருந்த வேலம்மாவத் தட்டி எழுப்பி, “வேலம்மா... எனக்கு எங்கம்மாவப் பாக்கணும்போல இருக்கு. பாக்கப்போனா என்ன சொல்வாங்களோ தெரியல. விடிஞ்சதும் எரசக்கநாயக்கனூர் போகணும்னு கண் கலங்கிக்கிட்டே சொன்னாரு.

மைனரோட அடாவடித்தனம் பிடிக்காம, வெளியபோன ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மா அதுவரைக்கும் மகன பாக்காமதான் இருந்தாங்க.

எரசை ஜமீன்தார் கதிர்வேலுச் சாமிக்குத்தான் மைனரோட அக்கா ராஜமாணிக்கத்தைக் கல்யாணம் செஞ்சு வெச்சாங்கனு சொல்லியிருக்கேன். ராஜமாணிக்கத்துக்குப் பொறந்ததுரத்னாமணி, ராதாமணினு ரெண்டு பொண்ணு.. ‘காமராஜேந்திர கதிர்வேல் பாண்டியன்னு ஒரு ஆணு. இவங்கள கவனிக்கிறதுக்குத்தான் மைனரோட தாயார் வேலுத்தாயம்மா எரசைக்குப் போயி அரண்மனையிலயே தங்கியிருந்தாங்க.

நம்ம மைனரு வில்வண்டியில எரசைக்குப் போய்ச் சேந்தாரு. தன்னோட தாயாரு முகத்தப் பாக்கணும்னு ஏக்கத்தோட எறங்கி வாசல்ல நின்னாரு.மைனர் வந்திருக்காருனு தெரிஞ்சும் அரண்மனைக்குள்ளயே இருந்த வேலுத்தாயம்மா வெளிய வரவேயில்ல. தம்பிக்கு உபசாரம் செய்யணும்னு அக்கா ராஜமாணிக்கம் ஓடிவர்றப்ப அவங்களயும் தடுத்துட்டாங்க.

ஒரு சேவகன்கிட்ட, “என் மகனோட முகத்துலயே முழிக்கக் கூடாதுனு முடிவு செஞ்சுதான் இங்க வந்து மகளோட நிம்மதியா இருக்கேன். இங்கயும் வந்து எனக்குத் தொந்தரவு தரப்போறானா? ஆடுற ஆட்டமெல்லாம் ஆடி, கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்தையெல்லாம் தொலச்சுட்டானே. இங்க வந்து என் மானத்த வாங்கப் போறானா? அவன் உள்ளயே வரக்கூடாது. செத்தாலும், அவன் முகத்துலயே முழிக்க மாட்டேன். திரும்பிப் போகச் சொல்லு..!”னு உத்தரவு போட்டாங்க.

வேலுத்தாயம்மா கத்தினது வாசல்ல காத்துக்கிட்டிருந்த மைனருக்குக் காதுல கேட்டுச்சு. சேவகக்காரன் வந்து சொல்றதுக்குள்ள மைனர் வில்வண்டியில ஏறி பொறப்பட்டுப் போயிட்டாரு.

பக்கத்துலதான் உத்தமபாளையம். மக்கா ராவுத்தரோட பேரன் அப்துல் லத்தீப்பைப் பாக்கணும்னு அவரோட வீட்டுக்குப் போய்ச் சேந்தாரு.

அப்துல் லத்தீப்கிட்ட மைனர், தன்னோட வாழ்க்கைல நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்லிச் சொல்லி அழுதாரு. அம்மாவையும் அக்காவையும் பாக்க முடியாத ஏக்கம் வேற.

என்னோட துர்நடவடிக்கையால என் வாழ்க்கைய நானே கெடுத்துக்கிட்டேன். எங்க ஜமீன எனக்கே மீட்டுக்குடுக்கணும்னு உங்க தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போனது என்னாலதான். இப்போ அந்தப் பாவத்த அனுபவிக்கிறேன். நீயாவது நல்லா இரு தம்பினு அழுது தீத்தாரு மைனர்.

உடனே லத்தீப், தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியக் கழட்டி, “அண்ணே... இந்தச் சங்கிலி நான் சின்னப் பையனா இருக்கும்போது உங்கப்பா சாமியப்ப நாயக்கரு எனக்குக் குடுத்தது. இத போட்டுக்கங்க. உங்க யோகத்துக்கு அதே செல்வாக்கு திரும்ப வந்துரும்...”னு சொல்லி, சங்கிலிய மைனருக்குப் போட்டு விட்டாரு.

அந்தச் சமயம் பாத்து எரசை ஜமீன்தார் கதிர்வேலுச்சாமி அங்க வந்தாரு. மைனரப் பாத்து, “என்ன மாப்ள... அம்மா திட்டுனாங்கனு கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்களா? உங்க அக்கா ராஜமாணிக்கம்கூட என்னய திட்டிக்கிட்டேதான் இருக்காங்க. நம்ம சொத்து எல்லாம் பிராது, வழக்குனு கோர்ட்ல இருக்கிறதால என் மேலயும் கோவமாத்தான் இருக்காங்க. அம்மாவும் மகளும் குழந்தைகள கூட்டிக்கிட்டுத் திருப்பரங்குன்றத்துக்குப் போயி தங்கப்போறாங்களாம். அரண்மனையில எனக்கும் நிம்மதியில்ல. வழக்கு எல்லாத்தையும் பி.டி.ராஜன்கிட்டதான் ஒப்படச்சிருக்கேன். அவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு நமக்கு ஒத்தாசையா இருக்காரு. அவரப் பாக்கத்தான் போய்கிட்டிருக்கேன்னு சொன்னாரு.

 (பி.டி.ராஜன்ஜஸ்டிஸ் கட்சி ஜாம்பவான்னு சொல்லுவாங்க. நம்ம சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இருக்காரே, அவரோட தகப்பனார்தான். பி.டி.ராஜனோட தாத்தா வக்கீல் தியாகராஜ முதலியார் செங்கல்பட்டச் சேந்தவரு. நல்ல செல்வாக்கோடவும் வாதாடுற திறமையினாலயும் அப்போ எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணி அக்குலம்மாவுக்கு அறிமுகமானாரு.

நெலம் சம்பந்தமான ஒரு சிக்கலான வழக்குல சென்னை ராஜதானி கோர்ட்ல ஜமீன் பக்கம் வாதாடி ஜெயிச்சுக் குடுத்தாரு. அப்பெல்லாம் வக்கீலுக்குப் பணம் கொடுக்கிற பழக்கமில்ல. அதனால தியாகராஜ முதலியாருக்கு எரசக்க நாயக்கனூர் ஜமீன்ல ஒரு பகுதி நெலத்தப் பிரிச்சுக் குடுத்து திவானா நெயமிச்சாங்க. அப்பத்தான் கம்பம், உத்தமபாளையம் பகுதியில நிறைய நெலம் சம்பாதிச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 43

அந்தச் செல்வாக்குலதான் பி.டி. ராஜன் லண்டன்ல போயி வக்கீலுக்குப் படிச்சுப்போட்டு இந்தியாவுக்கு வந்து அப்புறமா அரசியல்ல சேந்து நீதிக்கட்சிக்குத் தலைவராயிட்டாரு.

இப்பவும் பி.டி.ராஜன் பேர்ல முல்லையாத்துலயிருந்து ஒரு கால்வாய் ஓடிக்கிட்டிருக்கு.

நம்ம மைனரும் ஜமீன்தாருகூட போயி பி.டி.ராஜனச் சந்திச்சாரு.

கண்டமனூரைச் சேந்த அறுவத்திநாலு கிராமத்து சனங்களையும் ஒண்ணு சேத்து ஒரு கூட்டம் போட்டா நல்லாயிருக்கும். அதுக்கு ஏற்பாடு செய்ங்க. உங்களுக்கும் நல்லதே நடக்கும். காங்கிரஸ்காரங்க ஜமீன்தாருகள ஒழிக்கணும்னு ஒரே குறியா இருக்காங்க. அதனால, ஜமீன்தாருக, மிட்டாமிராசுக அம்புட்டு பேரும் நம்ம கட்சியிலதான் சேர்றாங்கனு மைனர்கிட்ட பி.டி.ராஜன் கேட்டுக்கிட்டாரு.

No comments:

Post a Comment