Wednesday, August 17, 2022

காந்தியடிகள் பற்றி ஈவெராமசாமியார் இன்வெறி உளறல்கள்

ஈவெராமசாமியார் இந்தியாவை காந்தி தேசம் என்று அழைக்கச் சொன்னார் என்று திரு ஸ்டாலின் பேசியிருக்கிறார்.


இந்த ஈவெராமசாமியார் மூடத்தனம் அறிவற்ற பைத்தியக்காரத்தன பேச்சு எல்லாவற்றையும் அறிவோடு சிந்திப்பவர் உணர்வர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஈவெரா பேச்சு செயல் மூடத்தனம், தொடர்ந்தால் கைது என்றது ஏன் எனப் புரியும்.
 
 ஈவெராமசாமியாரே விளக்கம் தருகிறார்:
ஆளுக்கொரு காந்தி பொம்மையை உடையுங்கள்; வீட்டில் மாட்டியுள்ள படத்தை ரோட்டில் வீசி எறியுங்கள்."
"காந்தி ஒன்றும் அபூர்வ புருஷர் அல்லர். பார்ப்பான், அப்படிப் பாமர மக்கள் நம்பும்படி-மகாத்மா ஆக்கினான். இப்போதல்ல; அப்போதே நான் குடியரசில் இதை எழுதி இருக்கிறேன். ரிஷிகளுக்கு எவ்வளவு அறிவோ அவ்வளவுதான் காந்திக்கும். அவரைப் பார்ப்பனர்கள் மகாத்மா ஆக்கிவிட்டார்கள் ! "
"காந்தி நாடு’ என்று வைக்கலாம் என்று சொன்னேன். முதலில் இந்தியா என்பதே கற்பனைச் சொல்; இப்படிக் கற்பனைச் சொல்லை வைத்துக் கொண்டு உயிரை வாங்கு வதைவிட உனக்குத்தான் காந்தியிடம் அதிக மரியாதை இருக்கிறது என்றாயே-அவர் பெயரை வைத்துவிட்டுப்போயேன் என்று யோசனை சொன்னேன். சுயநலக்காரர்கள் அதை வைக்கவில்லை; என்ன செய்வது என்று யோசனை கேட்டார்கள், சொன்னேன். அது போலவேதான், ‘காந்தி சகாப்தம்‘ என்று வைக்கச் சொன்னேன். நமக்கென்று வருடமே இல்லை. வெள்ளைக்காரன் கிறிஸ்து பிறந்து 1957 வருடம் என்று வைத்திருக்கிறான். நமக்கு இருப்பது பிரபவ, விபவ என்ற ஆரிய கதைப்படி உள்ள 60 வருடங்கள்தாம். இதைக் கொண்டு, காலத்தைக் கண்டு பிடிக்க முடியாது. நான் பிரமாதி ஆண்டில் பிறந்தேன். இப்பொழுது கணக்குப் பார்த்தால் 19 வயதுதானே ஆகவேண்டும்! எனக்கு எழுபதி தொன்பது என்று கண்டுபிடிக்கவேண்டுமானால் என் தாடியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். சரித்திரத்திலேயே புரட்டு ஏற்பட இது ஒரு காரணம், கல்வெட்டில்- கலியுகாதி, பிரபவ வருடம்’ என்று போட்டிருப்பான். கலியுகாதி’ என்பது பித்தலாட்டம்; அறிவுக்குப் பொருத்தமும் ஆதாரமும் அற்றது. பிரபவ என்று சொன்னால்- எந்த பிரபவ என்று சொல்லமுடியாது. இப்படி நமக்கென்று ஒரு சகாப்தம் இல்லாமல் அழிப்பதைவிட, காந்தி பெயரைத்தான் வையேன்! என்று யோசனை சொன்னேன். அவ்வளவுதான். காந்தி துரோகம் செய்தாரா, இல்லையா என்று உங்கள் அறிவைக்கொண்டு யோசியுங்கள்."
 
இந்த ஈவெராமசாமியார் மூடத்தனம் அறிவற்ற பைத்தியக்காரத்தன பேச்சு எல்லாவற்றினையும் இந்த ஒரு அறிக்கை போதும் 

இந்தியா நாட்டின் இறையாண்மையை  ஏற்காத மிருகங்கள் சங்க இலக்கியம் பாடலை அறியாதவர்கள். இன்றைய தமிழகம் எனும் மாநிலப் பரப்பு முழுவதும் வரலாற்றில் என்றுமே ஓரு தமிழ் அரசன் கீழ் இருந்ததே இல்லை.

இன்றைக்கு 2000 ஆண்டுகள் முன்பான சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாண்டிய மன்னன்  பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் 

இந்தியா இறைவனின் புண்ணியபூமி -மெய்யியல் மரபு பண்பாட்டு அளவில் ஒரே நாடு எனக் காட்டும் சங்க இலக்கியம்.
“வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்” புறநானூறு -6
 
வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.தெற்கிலோ உருகெழு குமரி முனை. கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல். 


 

No comments:

Post a Comment