Wednesday, August 17, 2022

 திருக்குறள் தமிழ் நன்கு வளர்ச்சி அடைந்து மொழி நிலை யாப்பு நெகிழ்வு அடைந்த பின்பு ஆண்டு  பொஆ.9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது என்பது தற்பொழுது பன்னாட்டு  பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்களின்  கருத்தாக அமைந்துள்ளது .

பேரறிஞர் சாமி சிதம்பரனார் 1956ல் எழுதிய இந்தக் கட்டுரை தமிழக அரசு- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு மலர் என வெளியிட்ட "குறழமுதம்" நூலில் சேர்க்கப் பட்டது 

திருவள்ளுவர்‌ காலம்‌ இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு  முன்‌; மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌; என்று கூறுவது தான்‌ வள்ளுவர்க்குப்‌ பெருமையென்று சிலர்‌ எண்ணுகின்றனர்‌. இப்படிக்‌ கூறுவதுதான்‌ தமிழர்க்குப்‌ பெருமை; தமிழர்‌
நாகரிகத்திற்கு உயர்வு; என்று கருதுகின்றனர்‌ சிலர்‌.
ஒரு புலவர்க்குப்‌ பெருமை ஏற்படுவது காலத்தின்‌ பழைமையைப்‌ பொறுத்தது அன்று; ஒரு நூலுக்கு மதிப்பு உண்டாவது மிகப்‌ பழைமையான நூல்‌ என்பதால்‌ மட்டும்‌ அன்று, பிற்காலத்திலே பிறந்த நூலானாலும்‌, முற்காலத்திலே. தோன்றிய நூலானாலும்‌ மக்கள்‌ வாழ்க்கையோடு இணைத்து நின்று அவர்களுக்கு வழி காட்டும்‌ நூலே சிறந்த நூலாகும்‌. அத்தகைய நூலை ஆக்கிய அரும்புலவரே முதற்‌ புலவர்‌ ஆவார்‌. இந்த உண்மையை உள்ளத்திலே கொண்டவர்கள்‌ திருவள்ளுவர்‌ காலத்தைப்‌ பற்றிக்‌ கலக்கம்‌ கொள்ள வேண்டியதில்லை.
திருக்குறள்‌ சங்க இலக்கியங்களுக்குப்‌ பின்னே பிறந்ததாயினும்‌ இது ஒப்பும்‌ உவமையும்‌ அற்ற உயர்ந்த நூல்‌. இது: போன்ற நூல்‌ திருக்குறளுக்கு முன்னும்‌ தோன்றியதில்லை; பின்னும்‌ பிறந்தது இல்லை. இது அறிஞர்கள்‌ அனைவரும்‌
ஒப்புக்கொள்ளும்‌ உண்மை.
 ஆனால் இன்றும் திருக்குறள் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கூற மறுக்கிறார்கள் திருவள்ளுவரின் காலம் 600 வாக்கில் அல்லது அதற்குப் பின்பு என்று மிகத் தெளிவான வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதினார்கள் அதில் உள்ள சிறு சிறு பிழைகளை பெரிது செய்து அவரை தாக்கியதாக அவர் தாக்கப்பட்டது போல தமிழகத்தில் வேறு எந்த ஒரு அறிஞரும் தாக்கப்படவில்லை ஆனால் அவருடைய கருத்தை வைத்து சாமி சிதம்பரனார் எழுதிய இந்த கட்டுரை அவர் இறந்து 53 ஆண்டுகளுக்கு பின்பு 2009 இல் கருணாநிதி அவர்களால் நின்ற நிலையில் திருவள்ளுவர் என்பதாக கன்னியாகுமரியில் வைத்த சிலை இன்று வெளியிடப்பட்ட அரசு இதழில் இந்த கட்டுரையை இடம்பெற்றது
 


No comments:

Post a Comment