Wednesday, August 24, 2022

செந்தில்குமார் எம்பி

 "நீதிபதியை விமர்சிக்கிறார்".. கொதித்த நாராயண் திருப்பதி! "முடிஞ்சா தொடு"! செந்தில்குமார் எம்பி சவால் By Shyamsundar I Updated: Tuesday, August 23, 2022, 18:16 [IST]



 சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் செய்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதி விமர்சனம் வைத்துள்ளார். சென்னையில் 83 லட்சத்தில் 2 & 3 பெட்ரூம் கார்னர் அபார்ட்மென்ட்கள் முன்கூட்டியே தொடங்குகிறது இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது. இந்த வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார். அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம். Recommended Video Neyveli NLC சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மண்ணில் சிக்கிய சிறுவன்! நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார். பிடிஆர் பேச்சும்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபமும்.. ஒரே நேரத்தில் நடந்த 2 நிகழ்வுகள் விமர்சனம் திமுகவினர் பலரும் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பதில் அளித்து வருகிறார்கள். திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆம். #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து,தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords, என்று விமர்சனம் வைத்துள்ளார். லார்ட் என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் அன் லார்ட்ஸ் என்று குறிப்பிட்டு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் வைத்துள்ளார். திமுக எம்பி நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த திமுக எம்பி செந்தில் குமார்.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் முற்பட்ட வகுப்பை சேர்ந்த பிரிவினர்தான். அப்படி செய்தவரை இது போன்ற கமெண்ட்கள்தான் வரும். சமூக நீதிக்கும், மக்கள் நல்திட்டங்களுக்கும் எதிரான கருத்துக்கள்தான் வரும். இந்தியாவின் முதல் எஸ்.சி, ஓ.பி.சி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தார்கள். அதற்கு கருணாநிதிதான் காரணம் என்று செந்தில் குமார் எம்பி குறிப்பிட்டார். நாராயண் திருப்பதி இதற்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதி, நீதிபதிகள் பற்றி கமெண்ட் செய்வது என்று மிகப்பெரிய குற்றம். இந்த பாராளுமன்ற உறுப்பினர் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் பற்றி ஜாதி ரீதியாக அவர் கருத்து சொல்லி இருக்கிறார். அவரின் இகழ்ச்சியான கருத்துக்களுக்கு அவர் தண்டிக்கப்பட வேண்டும், என்று பாஜகவின் நாராயணன் விமர்சனம் வைத்து இருந்தார். மோதல் இந்த நிலையில் தற்போது எம்பி செந்தில் குமார் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், போங்க.. Bring it on. .. முடிஞ்சா தொட்டு பார்(ங்க) என்று சவால் விட்டுள்ளார். அதாவது வழக்கு தொடுக்க விருப்பம் இருந்தாலோ, புகார் கொடுக்க விருப்பம் இருந்தாலோ முடிந்தால் செய்து பாருங்கள் என்று பாஜகவின் நாராயணனுக்கு திமுக எம்பி செந்தில் குமார் சவால் விட்டுள்ளார். திமுக எம்பி செந்தில் குமாரின் இந்த ட்விட் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரணமாக பாஜக, திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.


Read more at: https://tamil.oneindia.com/news/chennai/touch-me-if-you-can-dmk-mp-senthil-kumar-replies-to-bjp-narayan-on-freebies-case-472250.html

No comments:

Post a Comment