தேசியக் கொடியை அவமதித்த கிறிஸ்துவ மதவெறி ஆசிரியர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (36). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.
அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என சர்ச் சைக்குரிய வாசகம் எழுதி தேசியக் கொடியை தனது வீட்டின் மொட்டைமாடியில் கட்டி இந்திய தேசிய மூவர்ணக் கொடியை பறக்க விட்டார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதன் பின்னர் ஆசிரியர் எபினை தேசியக்கொடி அவமதிப்பு குறித்த வழக்கில் கைது செய்ய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment