Wednesday, August 17, 2022

திமுக ஆட்சி - முதல்வர் விளம்பர போட்டோ ஆப்ரரேஷனில் சிக்கிய் நரிக்குறவ்ர் அஸ்வினி

 கொடுத்த கடன் வந்து சேரவில்லை: நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டு

Follow Up Help Assistance: முதலமைச்சரின் அறிவிப்புகள் எதுவும் தங்களை வந்து சேரவில்லை என நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டுசென்னை: அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என கேள்வி எழுப்பி, அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முடிவு வரவில்லை. சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து,  மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் எனப் பெண் வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரல் அனைத்துத் தொடர்ந்து. கடந்த வருடம் தீபாவளி அன்று தமிழக முதலமைச்சர் அந்த பகுதிக்கு சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Written by - Malathi Tamilselvan |ug 18, 2022,

ஆனால் கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், கடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டை அஸ்வினி முன் வைத்துள்ளனர். 

 

தங்களுக்கு கடை எடுத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பலமுறை மனு கொடுத்துள்ளதாகவும் அஸ்வினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தங்களுக்கு கடை வாங்கிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பழங்குடியின பெண் அஸ்வினி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என்ன ஒரு கடை கூட கிடையாது வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்தார் அஸ்வினி.

கடந்த ஆண்டு தீபாவளி நாளன்று, வங்கி கடனுதவி, அங்கன்வாடி வகுப்பறைகள் கட்டும் ஆணைகளை, 33 நபர்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.10,000 வீதம் ரூ.3.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் 12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் கடனுதவியை முதல்வர் அளித்தார். 

அத்துடன், 6 பேருக்கு முதியோர் உதவித் தொகை; 21 பேருக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு சாதிக் சான்றிதழ்களையும் அப்போது முதலமைச்சர் வழங்கினார். மேலும், 34 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...