சமீபத்தில் பிர்மிங்கம்மில் நடந்து முடிந்த 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆனால், 2006ல் நடந்த போட்டியிலும் 49 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது. அப்போது 22 தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன. 2010ல் இந்தப் போட்டிகளை இந்தியாவே நடத்தியது.
இந்தியா பெற்ற தங்கங்கள் 22. அதில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் மட்டும் 16. தற்போது 2022 ல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இடம் பெறவில்லை ஆக கழித்தால் 2006 ஆம் ஆண்டு 6.
தலைநகர் தில்லியில் நடந்த போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த முறை 39 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. காமன்வெல்த் ஆட்டங்களில் இந்தியாவின் உட்சபட்ச சாதனை அந்த ஆண்டில்தான் நிகழ்த்தப்பட்டது. இதற்கு யார் காரணம்?
2010 ல் துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 30 பதக்கங்கள் (தங்கம் : 14) வில்வித்தையில் மொத்தம் 8 பதக்கங்கள் (தங்கம் 3), டென்னிஸில் 4 பதக்கங்கள் (தங்கம் 1) ஆக தற்போது இடம் பெறாத மூன்று விளையாட்டுகளில் பெற்ற 18 தங்கத்தைக் கழித்தால் உள்ளூரில் 20 தங்கம்.
No comments:
Post a Comment