ஆலந்தூரிலிருந்து - மீனம்பாக்கம் வரை இப்படி பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.. நான் பார்த்த வரை 7-8 ஓவியத்தை தவிர மற்றவை இப்படி பாழ் நெற்றியாக தான் பல உள்ளது.. அதில் சில பெண்களின் ஓவியங்களும் அடங்கும்..
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியான வரலாற்று திரிபுகள் செய்வானுங்க..
இதை உடனடியாக சரிசெய்யவிடில்... மோடிஜியின் படத்தை ஒட்டியது போல், இதையும் சரி செய்ய தயங்க போவதில்லை..
"குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க’ என,
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்."
சிவபக்தரான சேரன் செங்குட்டுவனின் நெற்றியில் திருநீற்றைக் காணோம்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அசுரரை வென்ற திருமாலுக்குத் திருவோண விழா எடுத்தவன்... நெற்றியில் திருமண் இருக்க வேண்டும்.
நாடெங்கும் சிவன் கோவில் கட்டிய மன்னர்களின் ஓவியத்தில் விபூதி இல்லை குங்குமம் இல்லை
அருமை அருமை
சேர சோழ பாண்டிய மன்னர்கள் தெய்வ வழிபாடுகளில் கை தேர்ந்தவர்கள் எண்ணற்ற ஆலயங்கள் இவர்கள் ஆட்சியில் உருவானது...
இறை பக்தியில் சிறந்து விளங்கியவர்களை நெற்றியில் திருநீறு அம்சம் இல்லாமல் ஒவியம் வரைவது என்ன பெருமையா...
இவர்களை கொச்சை படுத்தி இருக்கிறார்கள்
No comments:
Post a Comment