Friday, August 5, 2022

பாண்டிச்சேரி கிறிஸ்துவ செவன்த் டே அட்வன்டிஸ்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் சகாய‌ டோனிவளவன் கைது

புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கிறிஸ்துவ செவன்த் டே அட்வன்டிஸ்டு மேல்நிலைப்பள்ளி  மாணவிக்கு ஆசிரியர்  சகாய‌ டோனிவளவன் பாலியல் தொல்லை... ஆபாச படங்கள் மற்றும் whatsapp மெசேஜ் அனுப்பி மாணவிக்கு தொந்தரவு…பல்வேறு சமூக அமைப்புகள் பள்ளி முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம்

https://www.thanthitv.com/News/TamilNadu/plus-2-sexual-harassment-of-student-zoology-teacher-caught-129652

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் 7th டே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதகடிப்பட்டை சேர்ந்த டோனி வளவன் என்பவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் எடுத்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும்  பாதிக்கப்பட்ட  மாணவிக்கு பெற்றோர்கள் இல்லாததால் தான் தங்கி இருந்த உறவுக்காரர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். அதன்படி மாணவியின் உறவினர்கள் மற்றும் சகபள்ளி மாணவர்களுடன் இன்று குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் முதலியார் பேட்டை காவல் நிலையத்திற்கு இந்த புகாரை பரிந்துரை செய்து விட்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை  நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பல்வேறு சமூக அமைப்பினர் பள்ளியின் முதல்வர் ஜார்ஜ் அகஸ்டினை முற்றுகையிட்டு சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார் பேட்டை ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விடுவதாக உறுதியளித்தனர்.

இதுகுறித்து மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் கூறும்போது, பள்ளியில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தெரிந்தே பள்ளி முதல்வர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமல் மூடி மறைத்து இருந்திருக்கிறார். எனவே இன்று மாலைக்குள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்வதோடு ஆசிரியரை காப்பாற்றும் பள்ளியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்படி இல்லாத பட்சத்தில் புதுச்சேரியில்  உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து இந்த பள்ளிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Published by:Vaijayanthi S https://tamil.news18.com/news/puducherry/puducherry-private-school-teacher-sexually-harassed-12th-student-through-mobile-phone-whats-app-780522.html

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=788495

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...