ராமேஸ்வரம் மண்டபம் சர்ச் வந்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கிறிஸ்துவ பாதிரி.ஜான் ராபர்ட் போக்சோ சட்டத்தில் கைத
சர்ச்சுக்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை-மண்டபம் அந்தோணியார் சர்ச் கத்தோலிக்க பாதிரி.ஜான் ராபர்ட் கைது
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் அந்தோணியார் சர்ச், அருளானந்தர் சர்ச்சில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் ஜான் ராபர்ட்டை 46, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சிஊரணி அல்போன்ஸ் மகன் ஜான்ராபர்ட். கத்தோலிக்க பாதிரியாரான இவர் மண்டபம் அந்தோணியார் சர்ச், அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். ஞாயிறன்று சர்ச்சில் இவர் திருப்பலி பூஜை நடத்தி வந்தார். அப்போது 15 முதல் 17 வயது சிறுமிகள் மூவர் மற்றும் திருமணமான இளம்பெண் ஒருவரிடம் இறைப்பணி, சமூக சேவை செய்வது போல் நம்பிக்கை ஏற்படுத்தி, அலைபேசி எண்ணை வாங்கினார்.
பின் வாட்ஸ்ஆப் மூலம் சிறுமிகளுக்கு ஆபாச தகவல் அனுப்பியதுடன் 'திருமணம் செய்து கொள்கிறாயா' என கேட்டுள்ளார்.மேலும் சர்ச்சில் பிற பணிகள் இருப்பதாக கூறி 3 சிறுமிகளை வரவழைத்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் கூறியதும் பெற்றோர் பாதிரியாரை கண்டித்தனர். ஆனால் பாதிரியார் அதை பெரிதுபடுத்தாமல் அலட்சியமாக இருந்தார்.
பின் பெற்றோர் சிவகங்கை கத்தோலிக்க ஆயர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பினர். அதன் பிறகும் பாதிரியார் மீது நடவடிக்கையில்லை. வேறுவழியின்றி சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்தனர். அலுவலர் ஆனந்தராஜ் விசாரித்ததில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது உண்மை என தெரிந்தது. ஆனந்தராஜ் புகாரில், மண்டபம் போலீசார் பாதிரியார் ஜான்ராபர்ட்டை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment