படத்தில் இருப்பது இந்திய தமிழகம் கும்பகோணத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கும் பிரிட்ட்ஷ் கால நடமாடும் கழிவுபெட்டி
பிரிட்டிசார் இந்தியாவினை ஆண்ட காலங்களில் இதனை தூக்கி செல்வார்கள், யார் தூக்கி செல்வார்கள் என்றால் அவர்கள் இந்திய தமிழகத்தில் வைத்திருந்த அடிமை சாதி.
பின் காரியம் முடிந்ததும் துரை திரும்பி நிற்பார், அடிமைகள் சென்று பஞ்சு துணியால் துடைத்து மணம் வீசும் பொருட்களை தடவி விடவேண்டும், காரணம் நீரை பயன்படுத்துதல் பிரிட்டிசார் கலாச்சாரம் அல்ல
பின் பெட்டியினை சுத்தபடுத்தி அதனை நறுமணம் கமழுமாறு மிக மிக பத்திரமாக பாதுகாத்து துரை பின்னால் ஓட வேண்டியதெல்லாம் அந்த சாதியின் பணி
பிரிட்டிசார் தமிழக சாதிகளை எப்படி வைத்திருந்தார் என்பதற்கு இப்பெட்டி உதாரணம்
இந்த பிரிட்டிசாரை கல்வி தந்தான், ரொட்டி தந்தான் என வணங்கிவிட்டு பல்லாயிரம் வருடம் முன்பே தாழ்சாதியான குகனோடு ஐவரானோம் என்றும் குரங்குகளோடு நட்பானோம் என்றும் சமத்துவம் பேசியவனை, சலவை தொழிலாளி என்றாலும் அவன் சந்தேகம் போக அவன் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து தன் மனைவியினையே தீயில் இறங்க சொல்லி சமத்துவம் காட்டிய ராமபிரானை பழிப்பதெல்லாம் நிச்சயம் மனோவியாதி, மன வன்மம்
அவன் வீட்டில் அள்ளி போட்டது யார்? அவன் துணியினை வெளுத்தது யார்? அவனுக்கு காய்கறி விளைவித்தது யார்? வீடு தேடி வந்து வேலை செய்தது யார்?
பிராமணர் எப்படி எந்த சமூகத்துடனும் ஒட்டாமல் தனித்து வாழ்ந்திருக்க முடியும்? அது சாத்தியமா? ஒரு காலமுமில்லை
இந்துமதம் எல்லா சாதியும் சேர்ந்து வாழத்தான் வழி செய்தது, மலம் அள்ளும் தொழிலாளி என்றாலும் அவன் வீட்டு திருமணத்திலும் வேதம் ஓதியவனும் வழிபாடுகளை நடத்தியவனும் பிராமணனே
அவன் வீட்டு மூதாதையருக்கும் தர்பணம் கொடுத்தவன் பிராமணனே
ஆக இதையெலலம் மறைத்து எங்களை அடக்கினார்கள், பிதுக்கினார்கள் என சொல்லிகொண்டே இருப்பது அர்த்தமற்றது, நாட்டின் அமைதியினை குலைப்பது
சரி இனியாவது இந்த "லுக் அட் த பேர்ட்" என இன்றும் அமைதியாக பேசும் அந்த பெட்டி பற்றியும், பிரிட்டிசார் இங்கே தொடங்கிய சாதி கொடுமை பற்றியும், 200 ஆண்டுகளாக ஜார்ஜ் கோட்டை அருகே நடந்த அடிமை வியாபாரம் பற்றியும் கவிஞர் "விடுதலை வெள்ளை" கவிபாடுவார் என நம்புவோம்
நாமே தொடங்கி கொடுப்போம்
"இந்த பெட்டி சுமக்க கிறிஸ்தவ ஐரோப்பிய தூதர் யாரும் கிடைக்காததால் பக்கிங்காம் அரண்மலையில் இருந்து..."
No comments:
Post a Comment