Saturday, May 27, 2023

உதயநிதி அறக்கட்டளை - சிஎஸ்ஐ பிஷப் ஞானமுத்து பேத்தி கிருத்திகா உதயநிதியின் 36.3 கோடி சொத்துக்கள் முடக்கம்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் முடக்கம்: அமாலாக்கத் துறை
https://www.hindutamil.in/news/tamilnadu/997315-assets-worth-rs-36-3-crore-belonging-to-udhayanidhi-stalin-foundation-frozen-ed.html
அமலாக்க துறை உதயநிதி ஸ்டாலின் பவுண்டஷன் ரன்னும் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிகணக்கினை சுமார் 34.7 லட்சம் ரூபாயுடன் முடக்கி உள்ளது.
இது கல்லால் குரூப் குழுமம் லைகா படாதயாரிப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து subsidiary நிறுவனதினை சுமார் 114 கோடி மோசடி செய்த வழக்கில் , அமலாக்க துறை விசாரணையில் மொத்த மோசடி 300 கோடிக்கு மேல் என தெரியவர, இரசுண்டு நிறுவனங்களையும் சோதனை இட்டதில் லைகா நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது தெரியவே, அந்த தொகை மோசடி தொகையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிற ஊகத்தில் ed அந்த கணக்கை முடக்கி உள்ளது.
கழக கண்மணிகள் இந்த நோட்டீசை இணய தளத்தில் போட்டு அந்த வழக்கிற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை என நிறுவ முயற்சிக்கிரார்கள்.. அது உண்மையாக கூட இருக்கலாம்.
ஆனால் அடிக்கொடிட்டு உள்ள இரண்டு வரிகளை படியுங்கள்.
அமலாக்க துறை தெளிவாக அந்த அறக்கட்டளை இந்த பணம் எதற்காக தரப்பட்டது என தெளிவு படுத்தபடவில்லை , எனவே முடக்குகிறோம் என சொல்லி உள்ளது.

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரூ.114.37 கோடி மோசடி செய்ததாக, பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கவுரவ் சாச்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனர்களான சரவண பழனியப்பன், விஜயகுமரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜய் ஆனந்த் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டது.

அமலாக்கத்துறையின் விசாரணையில், புகார்தாரர் குறிப்பிட்டுள்ள நிறுவனத்துடன் சேர்ந்து லைகா நிறுவனம் ரூ.300 கோடி அளவில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 27.4.2023 மற்றும் 16.5.2023 ஆகிய தினங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்களைக் கைப்பறியது. 

இதன்தொடர்ச்சியாக கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சோதனையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் மூலம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றம் குறித்த முறையான ஆவணங்களையோ, சரியான விளக்கத்தையோ இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி திடீரென சோதனை நடத்தியது. அதேபோல சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத் இந்தச் சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது. இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-properties-of-krithika-udayanidhi-have-been-frozen-due-to-the-recent-raids-at-places-related-to-513709.html


No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...