Tuesday, May 23, 2023

தமிழர் இறைவன் கோவில்களை தாக்கும்/ திருடுபவர்களை மனநோயாளி என மாற்றும் போலீசு கதையாடல்

இந்துக் கோவில்களை மட்டும் குறிபார்த்து திருடும்/ எல்லா மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும்

 
 
இது இந்துக்கோவில் என தெரிகிறது.

அந்த கோவில் வாசல் தெரிகிறது
அந்த வாசலிலே இருக்கும் பூட்டை உடைக்க தெரிகிறது
உடைக்கமுடியாவிடில் சுவர் ஏறி குதிக்க தெரிகிறது
குதித்து சரியாக உண்டியல் இருக்கும் இடம் போக தெரிகிறது
உண்டியலை உடைத்து திருட தெரிகிறது
சாமி சிலைகளாக பார்த்து உடைக்க தெரிகிறது
திருடியவுடனே தப்ப முடியாவிடில் ஒளிந்துகொள்ள தெரிகிறது
ராஜகோபுரம் மீது சரியாக ஏறி ஒளிந்துகொள்ள தெரிகிறது


ஆனால் பிடிபட்டவுடனே மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது.
ஒரே ஒரு ஆள் குதித்து இவ்வளவு வேலையும் சரியாக சிறப்பாக தொழில் நேர்த்தியுடன்
மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் செய்ய முடிகிறது என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது.
இது எப்படி?
முன்பு சிறுவாச்சூரிலே இப்படித்தானே நடந்தது. குற்றவாளீகளை பிடிக்கமுடியவில்லை.
முன்பு கோயமுத்தூரிலே இரண்டு இடங்களிலே கோவில் சிலை சேதப்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்தவுடனே காவல்துறை வந்து மீட்டுக்கொண்டு போய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவித்தார்கள்.
கோவிலை சேதப்படுத்திய ஒருவன் வீடியோவில்யே சொல்கிறான் அப்படித்தான் செய்வேன் என. அவனையும் மனநலம் பாதிக்கப்பட்டவன் என காவல்துறை அறீவிப்பு.
அதெப்படி சரியாக இந்துக்கோவில்கள் மட்டும் தெரிகிறது?
ஒரு கடையோ, ஒரு வங்கியோ, ஒரு நீதிமன்றமோ, ஒரு நீதிபதியின் வீடோ, ஒரு காவல்துறை அதிகாரியின் வீடோ இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை?
மற்ற மத இடங்களை விடுங்கள்.
ஏன் ஒரு நீதிபதியின் வீட்டுக்குள்ளே புகுந்து தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனும் செய்தி வருவதில்லை?
காவல்துறையின் அதிகாரியின் வீட்டுக்குள்ளே பூந்து கற்பழித்த நபர் என்ற செய்தி எங்கேனும் வருமா?
வராது ஏன்னா அப்படி திட்டமிட்டு செய்பவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கமுடியாது என்பது தானே உண்மை.
அதென்னா சரியாக இந்துகோவில்களுக்கு மட்டும் எப்போதும் இப்படியே செய்தி வருகிறது?
என்ன மாயம்?
யார் செய்த கோலம்?
இதுவே வேறு மத வழிபாட்டு இடமாக இருந்திருந்தால் நாடே இந்திய நாடே கொதித்து இருக்கும்.
முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பார்கள்.
சாலைமறியல் போராட்டம் என நடந்திருக்கும்.
ஆனால்.....







No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா