Monday, May 15, 2023

தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வடமொழி சொற்கள் Ramakrishnan Suryanarayanan

 (ஆரியத்தோடு கூடிய) தமிழ்த்தாய் வாழ்த்து)தமிழ்த்தாய் வாழ்த்தை வாழவைக்கும் சம்ஸ்க்ருத சொற்கள் 

(இயற்றியவர்: மனோன்மணீயம் சுந்தரனார்)
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
---
இப்போ தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ளசம்ஸ்க்ருத மொழிச் சொற்களை காணலாம்:
மன <-- Skt. manas
உன்மணி <-- Skt. unmaṇi
சுந்தரனார் <-- Skt. sundara
மடந்தை <-- Skt. mūḍha
சீர் <-- Skt. śrī
வதனம் <-- Skt. vadanam
பரத <-- Skt. bharata
கண்டம் <-- Skt. khaṇḍam
தெக்கணம் <-- Skt. dakṣiṇa


சிறந்த (சிறத்தல்) <-- Skt. śiras
திராவிட <-- Skt. drāviḍa
திரு <-- Skt. śrī
நுதலும் <-- Skt. niṭala
தரித்த <-- Skt. dhṛta
திலகம் <-- Skt. tilaka
வாசனை <-- Skt. vāsana
பல் (பல) <-- Skt. bahula
உலகும் <-- Skt. loka
திசையும் <-- Skt. diś
பெருமை <-- Skt. bṛh
பரம் <-- Skt. param
உதரத்தே <-- Skt. udaram
உதித்தே <-- Skt. udita
ஆரியம் <-- Skt. ārya
சிதையா <-- Skt. chid
திறம் <-- Skt. sthira
---
ஆரியம் களைந்த தனித் தமிழ்த்தாய் வாழ்த்து:
(பெயர் முற்றிலும் அகற்றப்பட்ட ஒருவரால் இயற்றப்பட்டது)
நீராருங் கடலுடுத்த நில() எழிலொழுகும்
()ஆரும் ()எனத் திகழ் () ()இதில்
() அதில்() ()நல் ()நாடும்
தக்கசிறு பிறை() ()நறும் ()
() ()போல் அனைத்து() இன்பமுற
() புகழ்மணக்க இருந்த() தமிழணங்கே! தமிழணங்கே!
()உயிரும் () படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு ()பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்()‍ () ஒன்று() ஆகிடினும்
()போல் ()வழக்கழிந் தொழிந்து ()உன்
()இளமை ()வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
பெயரகற்றப்பட்டவர் நமக்கு சொல்லவரும் கருத்து: ஆரியம் பயன்படுத்தாமல் ஆரியத்தை திட்டுவது கடினம்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா