Saturday, May 13, 2023

செங்கல்பட்டு கத்தோலிக்க பேராயச் சொத்துகளை விற்று மோசடி பாதிரி சிரில்ராஜ் கைது

செங்கல்பட்டு கத்தோலிக்க கிறிஸ்துவப் விவிலிய மாவட்ட பேராயச் சொத்துகளை விற்று மோசடி பாதிரி சிரில்ராஜ் கைது 

தமிழர் சொத்துகள் பலவற்றை பிரிட்ட்ஷ் கொடுங்கோல் கிறிஸ்துவ அரசு சர்ச்களுக்கு முறையற்ற வகையில் தானம் கொடுத்து சென்றது. சர்ச் சொத்துகளை விற்று சர்ச் ஏமாற்றும் பாதிரிகள்

https://www.dailythanthi.com/News/State/fraud-by-sale-of-christian-archdiocese-assets-priest-arrested-964181?infinitescroll=1
கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி செய்த பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
செங்கல்பட்டு செங்கல்பட்டு மறை மாவட்ட கிறிஸ்தவ பேராயத்துக்கு சொந்தமான சொத்துகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது. இதன் அலுவலகம், ஆயர் இல்லம் திம்மாவரத்தில் உள்ளது. பேராய சொத்துகள் ஆயர் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

 புதுக்கோட்டை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில்ராஜ்(வயது 53) என்பவரை இந்த சொத்துகளை நிர்வகிக்க ஆயர் நியமித்தார். சொத்துகள் வாங்க, விற்க, பராமத்து வேலை செய்ய, வரி செலுத்த போன்ற பணிகளை செய்வதற்கு அவருக்கு பொது அதிகாரம் வழங்கப்பட்டது. 
 
ஆனால் சிரில்ராஜ், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேராயத்துக்கு சொந்தமான படூர், தையூர், இரும்புலியூர், புனித தோமையர்மலை ஆகிய இடங்களில் உள்ள சுமார் 4¼ ஏக்கர் விலை உயர்ந்த இடத்தை சுமார் 66 பேருக்கு சட்டவிரோதமாக ஆயர் இல்லத்தின் அனுமதி இல்லாமலும், யாருக்கும் தெரியாமலும் ரூ.11 கோடியே 68 லட்சத்துக்கு விற்று பேராயத்துக்கு நம்பிக்கை மோசடி செய்ததுடன், விற்ற பணத்தை பேராயத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் கணக்கு காட்டாமல் ஏமாற்றியது தெரியவந்தது. 

பேராய சொத்துக்களை ஏப்பமிட்ட போதகர்; போலீஸ் வலையில் சிக்கினார்!

செங்கல்பட்டு மறைமாவட்டத்தில், திருச்சபைக்கு(டயோசிசன்) சொந்தமான சொத்துக்களை முறைகேடாக விற்று, பணத்தை தன் வசமே வைத்துக் கொண்ட போதகரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு பேராயத்திற்கு பல இடங்களிலும் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தும் செங்கல்பட்டு ஆயர் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சிரில்ராஜ்(53) என்பவரை இந்தச் சொத்துக்களை பாதுகாக்க ஆயர் நியமித்து இருந்தார்.

ஆனால் இதை தவறாகப் பயன்படுத்தி படூர், தையூர், இரும்புலியூர், புனித தோமையார் மலை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் நான்கரை ஏக்கர் திருச்சபை இடங்களை 66 பேருக்கு, போதகர் சிரில்ராஜ் தன்னிச்சையாக விலைக்கு விற்றுள்ளார். இதன்மூலம் 11 கோடியே 66 லட்சம் ரூபாயையும் பெற்றுள்ளார். ஆனால் இதுகுறித்து போதகர் சிரில்ராஜ் பேராயத்துக்கும் தெரிவிக்கவில்லை. கணக்கும் காட்டவில்லை.

இதுகுறித்து பேராயத்தின் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், தாம்பரம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் போதகர் சிரில்ராஜைக் கைது செய்தனர்.

 இதையடுத்து தாம்பரம் கோர்ட்டு உத்தரவுபடி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் சிரில்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

பராசக்தி படம் பெரும் தோல்வி- வசூல் எவ்வளவு

Parasakthi Box Office Collection Day 15: Sivakarthikeyan’s Film To Face A Deficit Of Over 95 Crores – A Disaster!   January 25, 2026 Sivakar...