Monday, May 29, 2023

கலப்புத் திருமணம் & காதல் திருமணம் செய்தால் சாதி ஒழியாது - ஈவெ.ராமசாமியார்

 கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது -  ஈவெ.ரா

// நம் நாட்டிலேயே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்;நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம்,இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே..அந்த சாதிக்குள் கூட சாதி போவதில்லையே? அதிலும் பலசாதிகளாக்குகிறோம்.அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்?

பட்டிக்காட்டு தாசிகள் சாதி பார்த்துதான் புழங்குகிறார்கள்.இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்டதென்று கூறமுடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்புமணம் செய்துள்ளேன்.தோழர் சாமி சிதம்பரனார், தோழர் சா.குருசாமி,தோழர் எஸ்.இராமநாதன் முதலியவர்களுக்குத் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.அதனால் சாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானால் அப்போது தகராறுதான்.'கலப்புச் சாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு சாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்.//  - ஈவெ.ரா (22-2-1952 விடுதலை)

மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான், 

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை,திருட்டுத்தனமல்ல.அவனே பெருமைப்பட்டுக் கொள்வான்- 'நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன் அந்த பிராமணனுக்கு பிறந்தேன்! என்பான்.காசு கொடுத்து போவான்.

இப்போது அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது எங்களோடு சேர்ந்து பேசுகிறான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதி இருக்கிறான். தெலுங்கனும் இருக்கிறான் கன்னடியனும் வருவான்.அப்போதுதான் அடுத்தவன் வரமுடியும்.   ஈவெ.ரா 19/12/1973 டி-நகர் சொற்பொழிவு

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல - ஈவெரா

--------------------------------------------------------------------------------

03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் ஈவெரா உரையாற்றினார்.

என்ன தெரியுமா?

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும்.

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல.

நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான்.

ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

விடுதலை" -06.08.1968

 02.03. 1969ல்  ஈவெ.ராரு கட்டுரை எழுதினார். 

"ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.

இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்."

"ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்."

"இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.

நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.

ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்."

No comments:

Post a Comment