Sunday, May 7, 2023

மகனுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை… கம்பி கட்டுற கதை சொல்லிய இயக்குனர் தங்கர் பச்சான்!

மகனுக்கு ஏன் தமிழ் பெயர் வைக்கவில்லை… கம்பி கட்டுற கதை சொல்லிய இயக்குனர் தங்கர் பச்சான்!

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தங்கர் பச்சான். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், தயாரிப்பாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், ஒளி ஓவியர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் பல்வேறு மாணவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு முனைவர் பெற்றிருக்கிறார்கள். தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிவரும் தங்கர் பச்சான், எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ் என அறைகூவல் விடுவார். ஹிந்திக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை உதிர்த்தவர்.



இந்த நிலையில், தனது மகனுக்கு விஜித் என்று பெயர் சூட்டி இருக்கிறார் தங்கர் பச்சான். இந்த சூழலில், பேச்சாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா, தனியார் நிகழ்ச்சிக்கா தங்கர் பச்சானை பேட்டி கண்டார். அப்போது, அவரது மகனுக்கு தமிழ் பெயர் வைக்காதது குறித்து தங்கர் பச்சானிடம் கேள்வி எழுப்பினார் பர்வீன் சுல்தானா. தங்கர் பச்சானின் மகன் பெயர் விஜித் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளித்த தங்கர் பச்சான், அந்தப் பெயரை தானும் தனது மனைவியும் விருப்பத்துடன் வைக்கவில்லை என்று கூறிய தங்கர் பச்சான், இதற்காக கூறிய கதைதான் வேடிக்கையானது.

அதாவது, தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது, தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவின்போது தன்னையும் அறியாமல், விஜித் எப்படி இருக்கிறான் என்று தனது மனைவியிடம் கேட்டதாகவும், ஆகவே தனது மகனுக்கு அதே பெயரை சூட்டி விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லாரு பாருங்க என்று தங்கர் பச்சானை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

https://mediyaan.com/professor-parvveen-suthana-question-director-thankar-pachan-answer-controversy/ 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...