தேவதாசிகளாக மூத்த தேவியர்… -விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
‘வரலாற்றில் தேவதாசிகள்’. சி.எஸ்.முருகேசன் எழுதிய இந்நூல், 2005ல் முதற் பதிப்பும், 2012இல் இரண்டாவது பதிப்புமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூலகத்திற்குச் சென்று இந்நூலினைப் பெற்றுவந்த நான் வாசிக்கத் தொடங்கினேன்.


“புதுச்சேரி தேவதாசிகள்” எனும் தலைப்பிலான அத்தியாயத்தில் கீழ்க்காணும் தகவல் இடம்பெற்றுள்ளது:
“பல்லவர் காலத்தில் புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பாகூரில் ஒரு பெரிய ஏரி வெட்டப்பட்டது. தென்பெண்ணை ஆற்றையும் இவ்வேரியையும் இணைக்கும் கால்வாயை வெட்டியவள் “வங்காரி” என்றும் அக்கால்வாய்க்குக் கரை அமைத்தவள் “சிங்காரி” என்றும் இந்த ஏரியைக் காத்தவன் “எரமடி” என்றும் சொல்லப்படுகிறது.
பாகூர் மூலஸ்தானமுடையார் ஆலயத்தில் தேவதாசிகளாக (நாட்டியப் பெண்களாக) பணிபுரிந்த இந்த இரு பெண்களின் உருவங்களும் பாகூர் ஏரியின் மதகு படிக்கட்டுகளில் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.”
சிங்காரி, வங்காரி – சிற்பங்களின் புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நகைப்பாக இருக்கிறது! உண்மையில் இந்தச் சிற்பங்களுக்கு உரியவர்கள், ஜேஷ்டா எனப்படும் மூத்ததேவியர். பல்லவர் காலத்தவர்கள்.
இவர்களுக்கு சிங்காரி, வங்காரி என உள்ளூர் மக்கள் பெயர் சூட்டி இருக்கலாம். ஆனால், வரலாற்று ஆசிரியரோ, இன்னும் ஒருபடி மேலே போய், தேவதாசிகள் எனக் குறிப்பிடுகிறார். கொடுமை தான்!
South - Indian images Of Gods And Goddesses எனும் ஆங்கில நூலினை எச்.கிருஷ்ண சாஸ்திரி 1916இல் எழுதியிருக்கிறார். இதில், மூத்த தேவி குறித்தத் தகவலும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment