Sunday, May 21, 2023

கிறிஸ்துவ ஆங்கிலேய கலெக்டகலெக்ட வில்லியம் கேரோ உயிரைக் காப்பாற்றிய அன்னை பவானிக்கு நன்றியாக அளித்த தந்தக் கட்டில்

 1804 ஆண்டு ஜனவரி மாதம் .

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி. ஈரோடு - பவானி மாவட்ட கலெக்டராக இருந்தவர் வில்லியம் கேரோ என்பவர்.
ஒரு நாள் இவர் ஒரு மாளிகையில் தங்கியிருந்தா. அன்று இரவு கட்டிலில் படுத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அன்னை பவானியே இவரது கனவில் வந்து உடனே இவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும் இக்கட்டிடம் இடிந்து விழப்போகிறது என்றும் கூறினாள். திடுக்கிட்டு விழித்த கலெக்டர் உடனே தான் படுத்திருந்த கட்டிலிருந்து எழுந்து அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியேறினார். சிறிது நேரத்தில் அக்கட்டிடத்தின் மேல்பகுதி இடிந்து சரிந்தது கலெக்டர் படுத்திருந்த கட்டிலின் மேல் விழுந்தது.


ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய அன்னை பவானிக்கு நன்றி செலுத்தும் விதமாக பவானி சங்கேமேசுவரர் கோவிலுக்கு தந்தத்தால் ஆன கட்டில் ஒன்றை வழங்கினார்.
கட்டிலில் உள்ள எழுத்துப்போறிப்பு...
"ஸ்ரீபவானி கூடல் வேத நாயகி அம்மன் பள்ளி தந்தக் கட்டில் (ராசராச)
உல்லியம் காறோ துறை யவர்கள் உபயம்.
W.Gorrow - 11 - January 1804 "

தன் உயிரைக் காப்பாற்றிய அன்னை பவானிக்கு ஒரு தந்தத்தால் கட்டில் செய்து பவானி கோவிலுக்கு வழங்கினார். நடந்த விடயங்களை கோவிலில் பதிவு செய்து அந்தக் கட்டிலில் தனது கையொப்பத்தையும் இட்டார்...
ஆங்கிலேயருக்கும் அருள் பாலித்த அன்னை பவானி.
இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை -# 235/ 1950 - 51 )

"காணிக்கை "



No comments:

Post a Comment