அடிப்படைக்கல்வி உரிமையை கடைப் பிடிக்காத +2 கல்வி தராத மதரசாவுக்கான நிதியை நிறுத்துங்கள்'
நமது நிருபர் ADDED : அக் 13, 2024 புதுடில்லி: 'கல்வி உரிமை சட்டத்தை கடைப்பிடிக்காத, நடைமுறைபடுத்தாத மதரசாவுக்கு வழங்கப்படும் நிதியை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்' என, குழந்தைகள் உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை முறையான கல்வி வழங்கப்படுவதில்லை – உச்ச நீதிமன்றத்தில் NCPCR ஆணையம் அறிக்கை தாக்கல்..!
உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை ., “மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்படுவதில்லை. அங்கு முறையான பாடத்திட்டங்கள் இல்லை. இதனால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கிடைப்பதில்லை. இது தவிர்த்து, ஆரோக்கியமான கல்விச் சூழலும், வளர்ச்சிவாய்ப்புகளும் அங்கு இருப்பதில்லை.
பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் இஸ்லாமியக் கல்வி வழங்கப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மதரஸாக்களில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பான்மையான மதரஸாக்கள் தங்கள் நிர்வாகம் வழியாகவே ஆசிரியர்களை நியமிக்கின்றன. அந்த ஆசிரியர்கள் உரிய கல்வித் தகுதியைக் கொண்டிருப்பதில்லை. நிதி பெறுவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
என்.சி.பி.சி.ஆர்., எனப்படும் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மதநம்பிக்கை பாதுகாவலர்களா அல்லது உரிமை பறிப்பாளர்களா என்ற பெயரில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் 29 மற்றும் 30வது பிரிவுகள், தங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்கவும், கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமை அளிக்கின்றன.
ஆனால், முஸ்லிம்கள் நடத்தும் மதரசா எனப்படும் மதப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் முறைசார் கல்வி வழங்க வேண்டும். மதரசாக்களில் இது வழங்கப்படுவதில்லை.
ஆய்வறிக்கைகளின்படி, 1.2 கோடி முஸ்லிம் சிறுவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல், முறையான கல்வி வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மதம் தொடர்பான கல்வியுடன், வாழ்க்கைக்கு தேவையான முறைசார் கல்வியும் வழங்க வேண்டும். மதரசாக்களில் இவை பின்பற்றப்படுவதில்லை. முஸ்லிம் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இந்த மதரசாக்கள், பள்ளிகள் என்ற வரையறைக்குள் வராமல் தனியாக இயங்கி வருகின்றன.
மதரசாக்களில் முறைசார் கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாத மதரசாக்களுக்கு வழங்கும் நிதியை, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment