Tuesday, October 29, 2024

உதய்நிதி ஸ்டாலின் பாசீச திமுக சின்னத்துடன் டீசர்ட் - வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

 உதயநிதி உதயசூரியன் சின்னத்துடன் டீ-சர்ட் அணிவதை எதிர்த்த வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

author-image
WebDesk
 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அரசு விழாக்களில் உதயநிதி தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து துணை முதல்வர் உதயநிதி அரசு விழாங்களில் பங்கேற்க வேண்டும். சட்டை வாங்க அவரிடம் பணம் இல்லை என்றால், நாங்கள் சட்டை வாங்கித் தருகிறோம் என்று தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி, சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  “1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை பிடித்தது. அப்போது தி.மு.க தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா, தங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ் கலாசாரப்படி உடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு வந்த கருணாநிதி அதை பின்பற்றினார். தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ் கலாசார உடை அணிந்து வருகிறார். 2021-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2022-ம் ஆண்டு அமைச்சராக பதவி ஏற்றார். 

தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் உதயநிதி ஸ்ஆலின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். ஆனால், அவர் தமிழ் கலாசாரப்படி உடை அணிவது இல்லை. சாதாரண உடையான ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

தலைமைச் செயலகம் ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாட்டு விதிகளை வகுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, துணை முதல்வர் இதுபோல உடை அணியக்கூடாது. ஆனால், ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அவர் இந்த மாநில பிரதிநிதியாக திகழ்கிறார். அப்படிப்பட்ட மதிப்புக்குரிய பதவியை வகித்துக் கொண்டு, இதுபோல சாதாரண உடைகளை அணியக்கூடாது. 

எனவே, 2019-ம் ஆண்டு அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தமிழ் கலாசார மற்றும் முறையான உடைகளை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்று விளக்கமளித்தார். 

இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா..? டி சர்ட் கேஷுவல் உடையா..? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா..? என பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment