Saturday, October 11, 2025

கீழ்ப்பாக்கத்தில் அபு பேலஸ் ஹோட்டலில் மெத் போதை விருந்து சினிமா இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது

விடிய விடிய போதை விருந்து! வசமாக மாட்டிய பிரபல இசையமைப்பாளர் மகள்! கும்பல் சிக்கிய பின்னணி! 

Published : Oct 07 2025

https://www.polimernews.com/dnews/230534/how-to-get-caught-in-the-gang-of-18-daughter-of-the-composers-daughter

  https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-drug-party-bust-music-composer-daughter-among-18-arrested-articleshow-v2f29vc
சென்னையில் போதை விருந்தில் பங்கேற்ற தமிழ் சினிமா இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிய பின்னணி குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் ஹெடெக் நகரங்களில் ஒன்றான சென்னையில் வார இறுதி நாட்களில் நட்சத்திர சொகுசு ஹோட்டல்களில் போதை விருந்து படுஜோராக நடந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபல அபு பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள பப்பில் கஞ்சா, பெத்தமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் போதை மருந்து நடந்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

18 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் விடிய விடிய போதை விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 17 பேரையும், ஹோட்டல் மேலாளர் சுகுமாரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 3 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள், சிறிதளவு போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இசையமைப்பாளரின் மகள்

அப்போது போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது கைதானவர்கள் அனைவரும் வார இறுதி நாட்களில் ஒன்று சேர்ந்து ஸ்டார் ஹோட்டல்களில் போதை விருந்தில் பங்கேற்று வந்துள்ளனர். போதை விருந்தில் பங்கேற்பதற்காக ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் தகவல்கள் பரிமாறி வந்துள்ளனர். கைதானவர்களில் ஒரு பெண் ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகள் என்பதை அறிந்து காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

ஹைதராபாத் அருகே 'டிராப் ஹவுஸ்' பண்ணை வீட்டில் போதை விருந்து - 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்

 ஹைதராபாத் அருகே 'டிராப் ஹவுஸ்' ரேவ் பார்டி: 22 சிறுமிகள்உட்பட  65 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...