Sunday, October 12, 2025

திராவிடப் பண்ணையாரியம் - ஈவெராமசாமியார் உயர் ஜாதிவெறியில் பட்டியல் ஜாதி மருத்துவரை இழிவாகப் பேசியது

டாக்டர்களுடைய அன்பான நடத்தையாலேயே உலகத்தில் அரைவாசி நோய் போய்விடும். ஆனால் ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போனால் அங்கிருக்கிற டாக்டர் பார்த்தாலே நோய் தானாக வருகிறது!

இந்தத் திருச்சியிலே சர்க்கார் (அரசு) ஆஸ்பத்திரியிலே (மருத்துவமனையிலே) இருக்கிற (மாவட்ட மருத்துவ அதிகாரியிடம்) டி.எம்.ஓ.விடம் நோய் என்று சொல்லி எங்களுடைய ஆள்கள் போனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்துகிறாராம்..

அவர் ஜாதிமுறைப்படி ஓர் ஆதி திராவிடர் பறையன், பஞ்சமன் என்று சொல்லப்படும் கீழ் ஜாதியைச் சார்ந்த ஒருவர்.

இவர்களுக்கெல்லாம் என்ன பிறக்கும்போதே யோக்கியதை, அந்தஸ்து (தகுதி) வந்துவிட்டதா? யாராலே வந்தது இந்த யோக்கியதை என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதானே பறையன், சக்கிலி, பஞ்சமன் என்பவரெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன. யாராவது மறுக்கட்டுமே பார்க்கலாம். இதுமாதிரி ஆள்கள் எல்லாம் டி.எம்.ஓ.வாக வருவதற்கு யார் முயற்சி பண்ணினது? சொல்லட்டுமே பார்ப்போம்! ஜஸ்டிஸ் கட்சி என்ற இந்தத் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னால் எந்தப் பறையன், எந்தச் சக்கிலி, எந்தப் பஞ்சமன் இங்கு டி.எம்.ஓ.வாக (மாவட்ட மருத்துவ அதிகாரியாக) வந்திருக்கிறான்? எடுத்துக்காட்டினால் ஏற்றுக் கொள்கிறேன்.
நீங்கள் பிறவியில் இழிந்தவர்; ஜாதியால் கீழ்ஜாதி; உங்கள் பிறவி இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். அதற்கு ஆக ஜெயிலுக்கு (சிறைக்கு) வந்தோம். நீங்கள் பிறக்கும்போது உமக்கிருந்த யோக்கியதை என்ன? இந்த நாட்டிலேயே பிறக்கும்போதே பிறவியினால் யோக்கியதை ஒருவனுக்கு உண்டு என்றால் அது பார்ப்பானுக்குத்தானேயொழிய யாருக்கும் இல்லை. இதை நினைக்க வேண்டாமா?
ஈவெரா மணச்ச நல்லூரில் பேசியது 14.11.1958

https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/17561-2011-11-26-15-28-55 
இதை விடத் திமிர் மிக்க பேச்சை கேட்பது அரிது. என்னால்தான் நீ மனிதனாக மதிக்கப்படுகிறாய், நான் இல்லையென்றால் நீ இல்லை என்ற இந்த மனிதகுலத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரான விவாதத்தைத்தான் இன்றைய அரையணா அறிஞர்களும் கூசாமல் முன் வைக்கிறார்கள். இந்த பேச்சிற்கு முட்டுக் கொடுப்பவர்கள்தாம் காந்தியின் பேச்சுக்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து வியாக்கியானம் கொடுப்பார்கள்.



1967 ஜனவரித் திங்களில் தேர்தல் வேலைகள் மிகுந்த முனைப்புடன் நடைபெற்றன. பெரியாரின் பிரச்சாரப் பணி தொய்வின்றி நடந்து வந்தது. முழுநம்பிக்கையோடு காங்கிரஸ், மீண்டும் தமிழக ஆட்சிப்பொறுப்பில் அமரலாம் என்று எண்ணி, வேலை செய்தது. எதிர்க்கட்சிகளுக்கு எல்லாவகையான தொல்லைகளும் தரப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது விருகம்பாக்கம் மாநாட்டை வரலாற்றுச் சிறப்புடையதாக நடத்தி முடிந்திருந்தது. “காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்கிறார். படுப்பது நிச்சயம். ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று அந்த மாநாட்டில் பேசினார் ராஜாஜி. “சைதாப்பேட்டைத் தொகுதியில் திருவாளர் பதினொருலட்சம் போட்டியிடுவார்” என்று அண்ணா, கலைஞரின் பெயரை அறிவித்தார். ம.பொ.சி. உதயசூரியன் சின்னத்திலேயே தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததால், தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணமோ நம்பிக்கையோ இல்லாமல்தான் போட்டியிடுவதாக, மாற்றாரை நினைக்கத் தூண்டிற்று அண்மையில் பக்தவத்சலம் ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் போதாது என்று, புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனை நடிகவேள் எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகச் செய்தி பரவியது. எம்.ஜி.ஆர், பரங்கிமலைத் தொகுதிக்கே செல்ல முடியாமல், மருத்துவமனையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிகளில் இந்தத் தடவை மாணவச் சமுதாயத்தின் பங்கு அதிகமாயிருந்தது. போலிசார் ஆளுங்கட்சிக்கே அனுசரணையாகவும், எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவது கண்டு, கலைஞர் மு. கருணாநிதி மனம் வெதும்பி, மயிலைப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது ’தேர்தல் முடிய இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. ஆறே நாளில் ஆட்சி மாறும். அட்டகாசம் வேண்டாம்‘ என்று எச்சரித்தார். ’என்ன, மிரட்டுகிறாரோ?' என்று பக்தவத்சலம் அலட்சியமாய்ப் பேசினார். தேர்தலுக்கு முதல் நாளிரவு கலைஞரையே தீர்த்துக்கட்டக் காலிகள் முனைந்தனர்.

எப்படியோ? எல்லாருடைய கணிப்புக்கும், எதிர்பார்த்த முடிவுக்கும் முரண்பாடாகத், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின! ‘அய்யோ இவர் தோற்றிருக்கக் கூடாதே!’ என்று அண்ணாவே மனம் வருந்தக், காமராசர் விருது நகரில் தோற்றார். “தமிழர்களுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் போயிற்றே!” என்று: சி.சுப்ரமணியமும், ஆர்.வெங்கட்ராமனும் தோற்றபோது, அண்ணா ஆதங்கம் தெரிவித்தார். கூட்டணி மந்திரிசபை அமையுமோ எனப் பலர் அஞ்சிக் கொண்டிருந்ததும் நடைபெறாமல், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் மிக மிக மோசமாகத் தோற்றது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 137, காங்கிரஸ் 49, சுதந்திரா 20, இடதுசாரிக் கம்யூனிஸ்ட் 11, வலது சாரிக் கம்யூனிஸ்ட் 2, முஸ்லீம் லீக் 3 என்ற முறையில் வெற்றிகள் பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 25, காங்கிரஸ் 3, சுதந்திரா 6, இடது சாரிக் கம்யூனிஸ்ட் 4, முஸ்லீம் லீக் 1 என்பதாக வெற்றிகள் கிடைத்தன.

பெரியாரின் ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஈடு சொல்லவே முடியாது. காங்கிரஸ் தோற்றதில் ஏமாற்றமும், ஆச்சாரியார் கூட்டணி வென்றதில் வருத்தமும் மிகுந்தன! பெரியார்.

"பார்ப்பனர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; பார்ப்பனர் ஆதரவில் பணக்காரரும் வெற்றி பெற்று விட்டனர்.

சோஷலிசம் சமதர்மம் பற்றி நம்மக்கள் கவலையற்றவர்களாக நடந்து கொண்டார்கள்.

எதிரிகளும் பொய்யும் புரட்டையும் ஆயுதமாகக் கொண்டு போராடினார்கள்.

இவைகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் ஆட்சி தெரிந்தோ தெரியாமலோ நல்ல ஆதரவளித்து வந்திருக்கின்றது. தங்கள் தங்களை முக்கியப் படுத்திக்கொண்டு, காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பது பற்றிக் கவலைப்படாததால் காங்கிரஸ்காரர்களிலேயே மிகப் பெரும்பாலானவர்களுக்கு வேலையில்லாமலேயே இருந்து வந்தது. பொதுவாகக் காமராசர் தோல்வியைத் தவிர, மற்ற தோல்வி எதுவும் எனக்கு அவ்வளவாகக் கவலை தரவில்லை . நமது மக்கள் ஜனநாயக உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்பது எனது வெகு நாளைய கருத்து. இப்போதைய வெற்றியை மாற்ற வேண்டும் என்பதில், இந்த வெற்றியை அளித்த மக்களின் யோக்கியதையைச் சரிவர நிர்ணயிப்போமானால், நாம் ஒன்றும் தனி முயற்சி எடுத்துப் பாடுபட வேண்டியதில்லை.

மற்றும், நம் உயிர்போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறோம். பொதுவாக, இதுபோன்ற பார்ப்பனர் வெற்றி (பார்ப்பனரல்லாதார் தோல்வி) பற்றி எனக்கு இதற்கு முன் மூன்று அனுபவங்கள் உண்டு. மூன்றிலும் பார்ப்பனர் வெற்றி நிலைத்த பாடில்லை. ஆதலால் இன்றைய “பார்ப்பனர் வெற் பற்றியும் ஒன்றும் மூழ்கிப் போய் விடவில்லை என்றே நம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நானும் அதிகக் கவலைப்படவில்லை .

பொதுவாக நம்நாட்டுக்கு இப்படி ஓர் நிலை வரக்கூடும் என்று கருதியே, 1963-ல், காமராசர் தமிழ்நாட்டு முதல் மந்திரி பதவியை விட்டு அகில இந்தியக் கட்சிப்பணிக்குச் சென்றபோதே, நான் கூடாது என்று பத்திரிகையில் எழுதியதோடு, ‘தங்கள் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்’ என்று தந்தியும் அனுப்பினேன்.

அவர் விலகியதன் பயனாகத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுவதுடன், பொறுப்புள்ள ஆட்சி அமைவதற்கில்லாமலே போய்விட்டது. வடநாட்டிலும் பொறாமை, துவேஷம், கோஷ்டி, ஏற்பட இடம் ஏற்பட்டுவிட்டது!

காமராசர் தோல்வியைப்பற்றி, பலர் என்னிடம் வந்து, துக்கம் விசாரிக்கும் தன்மைபோல், தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல் - 1967 பிப்ரவரி 23ந் தேதி தோல்வியைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, 1966 நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில், அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள், என்று சொல்லி அனுப்பினேன். நானும் அப்படியே நினைத்துத்தான் சரிப்படுத்திக் கொண்டேன்!

இனி, நமது வேலை, நமது கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும், அதனால் ஏற்படும் பலாபலன்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டியதுமே நமது கடமையாகும்” என்று 27.2.1967 “விடுதலை”யின் தலையங்கப் பகுதியில் கையெழுத்திட்டு எழுதினார்.

காங்கிரஸ் தோல்வியைத் தம் தோல்வியாகக் கருதும் பரந்த பெரிய உள்ளம், பிறர் நோயைத் தம் நோயாய்க் கருதும் பேராண்மை, ஈர நெஞ்சம் பெரியாருடையதாகும். இடைக்காலத்தில் பதவியிலிருந்த பக்தவத்சலம், நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன என்றார். அடுத்துவரும் அரசு, பழிவாங்கக்கூடும், என்று பயந்து, கோட்டைக்குச் சென்று சில முக்கியமான இரகசிய ஃபைல்களைக் கொளுத்தி விட்டார் என்றும் அவர்மீது குற்றம் கூறப்பட்டது. சுதந்திராவில் 20 சட்டமன்ற உறுப்பினர் வென்றதாலும், தி.மு.க. ஆட்சிப்பொறுப்பு அனுபவம் பெறாத கட்சி என்பதாலும் ராஜாஜி அன்பர்கள், ராஜாஜி முதல்வராக வரவேண்டுமென அவரிடம் விருப்பம் கேட்டபோது, “அதை அவாள் சொல்ல வேண்டாமோ" என்றாராம். கே. ராஜாராம் வழியாக, இது அண்ணா காதுக்குப் போயிற்று. 6.3.67 அன்று அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை, சென்னை ராஜாஜி மண்டபத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது. நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, ஏ.கோவிந்தசாமி, எஸ். மாதவன், எஸ்.ஜே.சாதிக்பாஷா, மா.முத்துசாமி ஆகியோர் அமைச்சர்கள். 'இந்தி எதிர்ப்பு நீடிக்கும்; கோயில்கள் முதலிய அறநிலையங்கள் பாதுகாக்கப்படும், குடிசை வாழ்வோர் நிலை மேம்படுத்தப்படும். மது விலக்கும் நீடிக்கும்; மொத்தத்தில் நல்ல ஆட்சி நடைபெறும் என அறிவித்தார் புதிய முதலமைச்சர்! பல லட்சம் மக்கள் ராஜாஜி மண்டபத்தருகே குழுமி வாழ்த்து முழக்கினர்.

மதுவிலக்கு நீடிக்கும் என்று பத்திரிகையாளர்களிடையே அண்ணா கருத்தறிவித்ததும், பெரியார் தமது நீண்டகால வலியுறுத் தலான கொள்கையை நினைவு படுத்தலானார், 4.3.1967 “விடுதலை” தலையங்க மூலமாய். “நான் காங்கிரசை விட்டு வந்த பிறகு, சுமார் 30 ஆண்டுகளாகவே, இன்று உள்ள மதுவிலக்குக் கொள்கைக்கு எதிரி! இதற்காக, நான் மதுக்குடங்களைக் காவடி கட்டிச் சுமந்து போகிற மாதிரி, என்னைக் கேலிச் சித்திரம் போட்டுப் பத்திரிகைகளில் கண்டித்து எழுதியுள்ளார்கள். நான் காங்கிரஸ் மது விலக்குக்கு, உள் எண்ணம் கண்டுபிடித்து, “குடி அரசு” இதழில் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதியிருக்கிறேன், நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்!

1938-ல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் பதவிக்கு வந்த போது, நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஓர் ஆதாரம் தேடப்பட்டது. அதாவது 100க்கு 5வீதமே படித்த மக்களாயிருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 100க்கு 7 பேர் படித்த மக்களானோம். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, கல்வியை இன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. அதனால் வரவு செலவைச் சரிக்கட்ட 2.600 பள்ளிகளை (அதுவும் கிராமப் புறங்களில்) மூடவேண்டியுள்ளது அவசியமாகிறது என்று சொல்லியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சாக்கு கண்டு பிடித்துக் கொண்டார். ஆனால் அந்த மதுவிலக்கு அமலுக்கு வந்த நாள் முதல் நாளதுவரைக்கும், அந்த மதுவிலக்குக் காரணமாக, அது ஒரு குடிசைத் தொழிலாக மாறி. இன்று குடிப்பது ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவியிருக்கிறது!

இந்த மதுவிலக்கினால் குடியர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு, இதற்காகக் குடிகாரர்கள் செலவிடும் பணமும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததேயல்லாமல் குறையவில்லை என்பதோடு, முன்பு மதுக்கடைக்குச் சென்று வாங்கிக் குடித்தவர்களுக்கு, இன்று வீடு தேடி வந்து விநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மது உற்பத்தித் தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள், நாணயமில்லாதவர்கள் பெருகி இருக்கிறார்கள். அவர்கள் போலீசுக்கு நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். குடியர்கள் உடல் நிலையோ மிகமிகக் கேடடைந்தும் விடுகிறது.

இன்று ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு’ ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியார், ராஜாஜியைத் திருப்திப்படுத்த, அவருக்குப் பயந்து, மதுவிலக்கைத் தீவிரப்படுத்துவோம் என்று கூறி இருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து, கெட்டு உழல வேண்டும் என்பதுதான் பார்ப்பன தர்மம். எந்த நிலையிலும் பார்ப்பனர் யாருக்குமே நல்லவழி காட்டமாட்டார்கள்!

இந்த மது விலக்குத் துறையில், தேவைப்பட்டவர்களுக்கு எல்லாம் மது கிடைக்கும்படியும், மதுவினால் உடலும் புத்தியும், கெடாதபடியும் இருக்கத் தக்க வண்ணம், அது அனுமதிப்பு ஏற்படுத்தினால், சர்க்காருக்கு நல்ல நிதி வரும்படி ஏற்படுவதுடன், பார்ப்பனர் தவிர்த்த மற்ற சகல துறையிலும் உள்ள மக்களில், நல்ல அளவுக்கு, இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.

No comments:

Post a Comment

ஓசூர் பெத்தேல்பள்ளிகாப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் பாதிரியார் -பள்ளி தாளாளர் கைது

  ஓசூர் பெத்தேல் கல்வி சமூக சேவை நிறுவன காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!   போக்சோவில் பாதிரியார் பள்ளி தாளாளர் கைது நமது நிருபர்   ...