கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதி மன்றம்
Published by:Arivazhagan T news18-tamil
Last Updated:October 10, 2025 3:42 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். விஜயின் தவெக சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயணன், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் வாதத்தை தொடங்கினர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் கரூரில் நெரிசல் ஏற்பட்டதும் காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அங்கிருந்து சென்றதாகவும், எதிர்மனுதாரராக கூட இல்லாத விஜயைப் பற்றி உயர்நீதிமன்றம் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும் தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.சல் வழக்கு: தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
No comments:
Post a Comment