தமிழ்நாட்டில் இன்று சிறையில் இருப்பவர்களில் மூன்றில் ஒருவருக்கும் மேலாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காணும்போது உண்மையிலேயே மனசு வலிக்கிறது.
இது ஒரு சாதாரண புள்ளிவிவரம் அல்ல — இது நம்ம சமூகத்தின் எரியும் உண்மை.
கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு எல்லாமே இன்னும் பின்னோக்கி நிற்கும் இந்த சமூகத்துக்காக அரசு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு, சலுகைகள், நிதி உதவிகள் என பல கொடுத்து வருகிறது. ஆனாலும், அந்த நன்மைகள் அந்த சமூகத்தில் உள்ள சிலர் கைக்கு மட்டுமே சென்றுள்ளன. பயனடைந்தவர்களே திரும்பத் திரும்ப பயனடைகிறார்கள்.
உண்மையில் உதவி தேவைப்படுகிற கீழ்தட்டு மக்களுக்கு அந்த சலுகைகள் இன்னும் சென்றடையவே இல்ல. இப்படி சலுகைகளும் வாய்ப்புகளும் இருக்கிறதா என்று தெரியாமலே அந்த சமூகத்தில் இருப்பவர்கள் தான் அதிகம்...
இந்த நிலையில், அவர்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூக ரீதியிலும் முன்னேற்றுவோம் என்று சொல்லிக்கொண்டு திருமாவளவன் போன்ற சிலர் அரசியலுக்காகவே அதை ஒரு ஆயுதமாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே அந்த அடித்தட்டு பட்டியல் இன மக்களுக்காக அவர் உழைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
சமூக முன்னேற்றம் என்ற பெயரில் சண்டை போடுவது, அடிப்பது, குத்துவது, உடைப்பது, உசுப்பி விடுவது — இதெல்லாம் சமூக நீதியா? இல்லை அமைதியை சிதைக்கும் அரசியல் விளையாட்டா? என்பதை சொல்லுங்கள் மிஸ்டர் திருமாவளவன்..
அறிவு வளர்த்தால்தான் சமூகம் வளர்ச்சி அடையும். ஆனால் சிலர் மக்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைத்து, கோபம், சண்டை, பிரிவினை என்ற மூன்று விஷங்களால் நம்மை கட்டி வைக்கிறார்கள்.
இனி நாம் விழிக்கணும்!
அன்பும் ஒற்றுமையும் தான் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்.
சண்டை அல்ல — சிந்தனை தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தி என்பதை உணர்ந்து திருமாவளவன் அவர்கள் செயல்பட வேண்டும்..
No comments:
Post a Comment