Friday, October 17, 2025

சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

பெயர் மாற்றத் தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

ஊர் பெயர்கள், தெருப் பெயர்கள் மற்றும் நீர் நிலைகளின் பெயர்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது..

தமிழக அரசு கடந்த சில தினங்கள் முன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகத்தில் உள்ள ஜாதி பெயர்களை குறிக்கக்கூடிய கிராமங்கள், தெருக்கள், நீர்நிலைகள், சாலைகளின் பெயர்களை உடனடியாக மாற்றி அமைக்கப் போவதாக தெரிவித்திருந்தது.

அந்த அரசாணையில் மாற்று பெயர்கள் வைப்பதற்கு கலைஞர், அறிஞர் அண்ணா, பெரியார் போன்றவர்களின் பெயர்களை வைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெயர்கள் மாற்றும் பட்சத்தில் பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என வாதம் முன் வைக்கப்பட்டது. 

ஒவ்வொரு தனி நபரும் தங்களது அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, வங்கி பாஸ் புக், கல்வி சான்றிதழ்கள் போன்ற அனைத்திலும் முகவரியை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள். 

இது போன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்கு இந்த அரசாணையில் எந்தவிதமான பரிகாரமும் வழங்கப்படவில்லை. எனவே அரசாணையை தடை செய்ய வேண்டும் என வாதம் செய்யப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நீதியரசர் திருமதி. அனிதா சுமந்த் மற்றும் நீதி அரசர் திரு. குமரப்பன் ஆகியோர்கள் அமர்வு இந்த அரசாணையின்படி தமிழக அரசு எங்கெல்லாம் இது போன்ற பெயர்களை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது, அது குறித்த ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும் அதை தவிர்த்து வேறு எந்த விதமான நடைமுறை செயல் பாடுகளையும் செய்யக்கூடாது என இடைக்காலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர், மதுரை வழக்கறிஞர் திரு. எஸ் பரமசிவம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. 

அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு G. கார்த்திகேயன் அவர்கள் ஆஜராகி வாதாடினார்கள். M. கார்த்திக் வெங்கடாஜலபதி,   P. சுப்பையா,  உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகியோரும் வழக்காட இதில் தக்க உதவிகள் செய்தனர்..

No comments:

Post a Comment

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிவகங்கை முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!     17 Oct, 2025  சிவகங்கை:  சிவகங்...