Tuesday, October 21, 2025

சர்ச் இருப்பதால் காளி கோவில் திருவிழாவிற்கு தேர் செல்லக்கூடாது என கிறித்தவர்கள்

 திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் உள்ள காளி கோவில் திருவிழாவிற்கு தேர் செல்லும் பாதையில் சர்ச் இருப்பதால் அவ்வழியாக தேர் செல்லக்கூடாது என கிறித்தவர்கள் தடை ஏற்படுத்தி பிரச்சனை செய்ய. தமிழர் இறைவன் தேரை இழுத்துள்ளனர். ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

https://x.com/imkarjunsampath/status/1929388573163470991

தமிழர் மீது தாக்குதல் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய காவல்துறையினர் மாறாக இந்துக்கள் மீதே கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.   https://x.com/imkarjun.../status/1929388573163470991/photo/3   https://x.com/imkarjun.../status/1929388573163470991/photo/3


அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு! திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் உள்ள காளி கோவில் திருவிழாவிற்கு தேர் செல்லும் பாதையில் சர்ச் இருப்பதால் அவ்வழியாக தேர் செல்லக்கூடாது என கிறித்தவர்கள் தடை ஏற்படுத்தி பிரச்சனை செய்துள்ளனர். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து இந்துக்கள் தொடர்ந்நு தேரை இழுத்துள்ளனர். ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் உரிய பாதுகாப்பு அளித்து தேரை இழுக்கவும், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய காவல்துறையினர் மாறாக இந்துக்கள் மீதே கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்துக்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்துவிட்டு காவல்துறையினரே தேரை இழுத்துச் செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு வக்கம்பட்டியில் வயதான முதாட்டி ஒருவர் இறந்த போது அவரது உடலை கொண்டு செல்ல தடை விதித்து சர்ச் முன்பு கிறிஸ்தவர்கள் பிரச்சனை செய்ய இந்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய அதன்பிறகு உடனடியாக இறந்துபோன மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல தடை விதித்து பிரச்சனை செய்தவர்களை கண்டித்தும் உள்ளூர் அரசு நிர்வாகம் உடனடியாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அந்த மூதாட்டியின் இறுதிசடங்குகள் நடைபெற பாதுகாப்பு அளித்து பிரச்சனைக்கு தீர்வு காணவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் இருக்க பொதுச்சாலையை தார்சாலையாக அமைத்துத் தரவேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்துக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஏற்கனவே இருக்கும் பொதுச்சாலையை தார்சாலையாக அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றமும் சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து அப்பகுதியில் பொதுச்சாலையை தார்சாலையாக அமைத்துத் தந்து பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்ததப்பட்டு வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி கிராம இந்துக்களுக்கு அநீதி இழைப்பது ஏற்புடையதல்ல.. தமிழக முதல்வர் திரு.

அவர்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி உடனடியாக பாதிக்கப்பட்ட வக்கம்பட்டி கிராம மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அப்பகுதியில் இந்துக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்றித் தருமாறு அறிவுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment