Monday, October 13, 2025

அயோத்தியில் ஶ்ரீராமஜன்மபூமி தீர்த்தக்கரையில் தென்னாட்டின் மூன்று பக்த கவிகளின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன.

  அயோத்தியில் ஶ்ரீராமஜன்மபூமி ஆலய வளாகத்திலுள்ள பிருஹஸ்பதி குண்டம் என்ற தீர்த்தக்கரையில் தென்னாட்டின் மூன்று பக்த கவிகளின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன. உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

- கன்னடத்தில் தேவரநாமா எனப்படும் புகழ்பெற்ற பக்திப் பாடல்களை இயற்றிய புரந்தரதாசர் (15ம் நூற்.),
- தமிழ்க் கீர்த்தனைகள் வடிவில் இராமாயணத்தை இராமநாடகம் என்ற மகத்தான இசைநாடகமாக இயற்றிய அருணாசல கவிராயர் (18ம் நூற்.),
- இசையாலும் தெலுங்கு கீர்த்தனைகளாலும் ராமபக்தி சாம்ராஜயத்தைக் கட்டியெழுப்பிய சத்குரு தியாகராஜ சுவாமிகள் (18ம் நூற்.)
கர்நாடகத்தின் அடுத்தடுத்த மாநில அரசுகள் புரந்தரதாசரின் நினைவைப் போற்றும் வகையில் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன. அவரது சிலைகளும் கணிசமான இடங்களில் உள்ளன.
ஆனால், தமிழுக்கும் இசைக்கும் பெரும் தொண்டாற்றிய பெரியோர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசு என்ன செய்துள்ளது என்று பார்த்தால் கிடைக்கும் விடை பூஜ்யம்.
தமிழ் மூவர் எனப்படும் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகிய கீர்த்தனைக் கவிஞர்கள். சங்கீத மும்மூர்த்திகள் எனப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய இசைவாணர்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் இசைப் பாரம்பரியத்தின் பெருமிதங்கள். இவர்களில் ஒருவருக்குக் கூட தமிழ்நாட்டில் அரசு சார்பில் எங்கும் சிலை வைக்கப் படவில்லை. இருவருக்கு அயோத்தியில் சிலைவைத்து உ.பி. அரசு அந்தப் புகழைப் பெற்றுக் கொண்டு விட்டது.
மாறாக, தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையின் கடற்கரை சாலையில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜியு போப் போன்ற அன்னிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களான கிறிஸ்தவ மிஷனரிகள் தான் சிலைகளாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நாங்கள் தான் உங்களின் ஆண்டைகள் இந்திய அடிமைகளே என்று கிறிஸ்தவம் பிரகடனம் செய்வது போல துருத்திக் கொண்டிருக்கின்றன அந்த சிலைகள். திராவிட இயக்கம் என்ற கலாசார அழிவு சக்தியின் மூளைச்சலவைக்கு முழுதுமாக ஆட்பட்ட தமிழ்நாட்டின் கொத்தடிமைகள், இதைப் பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி அந்த சிலைகளுக்கு ஊடாக நடந்து சென்று கடற்கரையில் கெக்கலித்து ஓலமிட்டு சுண்டலும் மீன்வறுவலும் வாங்கித் தின்று "வாழ்ந்து" வருகிறார்கள்.
உண்மையில் தமிழ்ப் பண்பாட்டின் உன்னதங்களான பெரியவர்களின் சிலைகள் அல்லவா அந்தக் கடற்கரைச் சாலையில் இடம்பெற வேண்டும்?
அவர்களின் சிலைகளை வைக்க அங்கே இடம் இல்லை என்றால், மேற்படி மிஷனரிகளின் சிலைகளை நகரில் காளான்கள் போல பெருகி இருக்கும் பெரிய சர்ச்சுகளுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அங்கே இடம் உருவாக்க வேண்டும்.
அதுதான் தமிழ்க் கலாசாரத்துக்கு உண்மையாக செய்யப்படும் நீதி.

No comments:

Post a Comment

அண்ணாமலை Vs டி.ஆர்.பாலு: 3 மணி நேர விசாரணை - பாலு பதில் இல்லாமல் திணறல்!

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை vs டி.ஆர்.பாலு: 3 மணி நேர விசாரணை - பாலு பதில் இல்லாமல் திணறல்! https://www.youtube.com/watch?v=HckNANG...