தமிழக அரசும் காவல்துறையும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, இனி நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நாங்கள் மேல்முறையீடு செய்யப்போகிறோம் அதனால் அந்த தீர்ப்பை மதிக்கவேண்டியதில்லை என்று யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்தானே?!
இது பலவகையிலும் Backfire ஆகும்போதுதான் இதன் விளைவுகள் புரியும்.
ஒரு நாள் எந்த அரவமும் இல்லாமல் தீபமேற்றி வணங்கிவிட்டு போயிருப்பார்கள், அது அன்றே முடிந்திருக்கும்.
தீபமேற்றவிடாமல் செய்தால், இஸ்லாமியர்கள் மகிழ்ந்து தமக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக செய்த இந்த செயலால் என்னென்ன பாதிப்புகள் எதிர்காலத்தில் வரும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
ஒரு பொதுவெறுப்பு மற்றும் மனக்கசப்பு உருவாகிறது, அதற்கு இஸ்லாமியர்களும் காரணமில்லை, இந்துக்களும் காரணமில்லை!
அதேபோல் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மதிக்காமல், ஆட்சியாளர்களின் ஏவல் அடிமைகள் போல் நடந்துகொண்ட காவல்துறையினர் ஆட்சி மாற்றத்தின்போது என்ன ஆனார்கள் என்பது கடந்தகாலத்தில் பதிவுகளாக இருக்கிறது.
இருபுறமும் கூர்மையான கத்தியை கையிலெடுத்திருக்கிறீர்கள், விளைவுகளை பார்க்கத்தான் போகிறீர்கள்.
https://x.com/BJP4TamilNadu/status/1996970317839782026
திருப்பரங்குன்றம் விவகாரம் பெரிதாக வெடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டதே திமுக தான். இஸ்லாமியர்களை தங்களுடைய சுயநல அரசியலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துகிறது திமுக.
தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு கொடுத்துவிட்டார்.
அப்படி அவர் தீர்ப்பு கொடுக்கும் போதே, என்னுடைய தீர்ப்பு நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால், தாராளமாக மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
தீர்ப்பு கொடுக்கப்பட்ட உடனெவே, நாங்கள் மேல்முறையீட்டுக்கு செல்கிறோம், எனவே தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலேயே கேட்டிருக்க முடியும். ஆனால் திமுக அதை செய்யவில்லை.
1ம் தேதி தீர்ப்பு கொடுக்கப்பட்ட பிறகு வழக்கம் போல் நீதிபதி ஜி ஆர் சாமினாதன் மேல் சாதிய வன்மத்துடன் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியது திமுக.
ஆனால் தமிழக அரசு, திமுக தீர்ப்பை எதிர்த்து எந்தவித கருத்தும் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் தேதி, 2ம் தேதி, 3ம் தேதி வரை அரசு மேல்முறையீடு செய்யவில்லை. பத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்ற தனிநீதிபதியின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்று திமுக கருதியிருந்தால். உடனடியாக அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும்.
உடனடியாக மேல்முறையீடு செய்து தீர்ப்புக்கு தடை வாங்கியிருந்தால் இந்த பிரச்சினையே இல்லை.
ஆனால் திமுக 3 நாட்களும் மவுனமாக இருந்தது.
100 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். கண்டிப்பாக அரசுக்கு இது தெரிந்திருக்கும். உளவுத்துறை, காவல்துறை ரிப்போர்ட் செய்திருக்கும். ஆனாலும் அரசு கள்ளமவுனத்தில் இருந்தது.
அரசின் செயல்பாடுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது போலவே இருந்தது.
ஆனால் மாலை வரை தீர்ப்பு குறிப்பிட்ட இடத்தில தீபம் ஏற்றுவதற்கான எந்த வேலையும் நடைபெறவில்லை என்பதை தனி நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் மனுதாரர்கள். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அங்கிருந்த அரசு தரப்பு, தீபம் 6 மணிக்கு தான் ஏற்றப்படும். எனவே எங்களுக்கு 6 மணி வரை நேரம் இருக்கிறது. அதற்கு முன்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறது. இதை தொடர்ந்து 6.05க்கு வழக்கை விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார் நீதிபதி.
தீபம் ஏற்றும் எண்ணமே இல்லாத அரசு எதற்காக நீதிமன்றத்தில் பொய்யான வாக்குறுதி கொடுக்க வேண்டும். தீபம் ஏற்றப்படும் நேரம் வரை அரசு தன்னுடைய முடிவை தெரிவிக்காத காரணம் என்ன?
கேட்டால் மேல்முறையிடு செல்ல ஒரு மாதம் வரை கால அவகாசம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் மேல்முறையீடு சென்று தீர்ப்புக்கு தடையுத்தரவு வாங்கும் வரை தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்பது தான் அர்த்தம்.
6 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என்று மலையடிவாரத்தில் காத்திருந்த பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபத்தை ஏற்றினார்கள்.
இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே. நீதிமன்ற உத்தரவை பின்பற்றமாட்டோம். வழக்கமாக எங்கு தீபம் ஏற்றப்படுமோ அங்கு தான் தீபம் ஏற்றப்படும் என்று அரசு சொல்லியிருந்தால், அவ்வளவு மக்கள் அங்கு கூடியிருக்க மாட்டார்களே.
அரசு அறிவிப்புக்கு பிறகு அங்கு கூடினாலும் காவல்துறையை வைத்து கூட்டம் சேரவிடாமல் செய்திருக்கலாமே.
இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான எல்லா வாய்ப்புகளும் திமுக அரசுக்கு இருந்தன. ஆனால் திமுக எதையுமே செய்யவில்லை.
மாறாக பிரச்சினை பெரிதாக வேண்டும், இந்துக்களுடைய கோபத்தை தூண்ட வேண்டும், அதன் மூலமாக ஏதேனும் பெரிய சம்பவம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது.
தீர்ப்பு வந்தவுடன் நீதிபதியிடம் தீர்ப்பை நிறுத்தி வைக்க சொல்லியிருக்கலாம். அதையும் செய்யவில்லை
நீதிபதி ஒத்துக்கொள்ளவில்லையா? உடனடியாக மேல்முறையீடு செய்து தீர்ப்புக்கு தடை வாங்கியிருக்க முடியும்.
திமுக அதையும் செய்யவில்லை.
தீர்ப்பை நிறைவேற்ற முடியாது என்பதை முன்னதாகவே சொல்லியிருக்கலாம். திமுக அதையும் செய்யவில்லை.
6 மணி வரை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் திருப்பரங்குன்றம் மீது திருப்பி விட்டு, 6 மணிக்கு வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபத்தை ஏற்றுவதன் மூலம் இந்துக்களின் கோபத்தை தூண்டி விட வேண்டும் என்று திமுக திட்டமிட்டது மிக தெளிவாக தெரிகிறது.
ஆனால் பாஜக கலவரம் செய்ய முயன்றது என்று பரப்பி வருகிறது கொத்தடிமை முட்டாள் கூட்டம். கலவரத்தை நாங்கள் தடுத்து விட்டோம் என்று பொய் பிரச்சாரம் செய்கிறது.
திமுக நினைத்திருந்தால் 1ம் தேதியே இதை தடுத்திருக்க முடியும். ஆனால் இத்தனை நாடகங்களை நடத்தியது எதற்காக என்பதை மக்களே உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
No comments:
Post a Comment