Tuesday, May 9, 2023

திண்டுக்கல் லியோனி மலேசியா

நேற்று பினாங்கில்
மாலை 5மணிக்கு துவங்க இருந்த திண்டுக்கல் லியோனி அவர்களின் பட்டிமன்றம் 2மணிநேரமாகியும் ஆரம்பிக்கப்படாததால் காசு கொடுத்து
டிக்கெட் வாங்கியிருந்த பொதுமக்கள் காசை திரும்பக்கேட்டு கூச்சலிடும் காணொலி டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.பொறுமையிழந்த பொதுமக்கள் ஏற்பாட்டாளரிடம் சண்டை போடுவது தான் நியாயம்.விருந்தாளியாக வந்திருக்கும்




 







உலகப்புகழ்பெற்ற ஒரு பேச்சாளரான லியோனி அவர்களிடம் கூச்சலிட்டு அநாகரிகமாக மோதுவது நாகரிகம் இல்லையென்பதே என் கருத்து.இனி லியோனி மலேசியா வருவாரா தெரியவில்லை.
அப்பதிவில் ஒரு குறும்புக்காரர்
"அவனவன் ஒரு நாசி லெமாக் வாங்க 8மணிநேரம் காத்துக்கெடக்கான்.ஒரு ரெண்டு மணி நேரம் பொறுக்க கூடாதாப்பா" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.


இது ஒரு உண்மைச்சம்பவம், ஆறேலு வருடங்களுக்கும் முன்பே சென்னை மண்ணடியில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர் கூறியது -
எனது நண்பர் அப்பொழுது வெளிநாடுகளில் இங்குள்ள பிரபலங்களை அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தும் தொழில் செய்துவந்தார்-
அவரிடம் பேசிய காலங்களில் லியோனி ஓரளவிற்கு தமிழகம் முழுவதும் பிரபலமடைந்திருந்தார், தி.மு.கவின் தயவால் இன்று பலமடங்கு முன்னேறிவிட்டார்-
ஆனால், அவரது ஆரம்பகாலங்களில் அதாவது சினிமாப் பாடல்களை வைத்து பட்டிமண்றங்கள் பேசி அதன் கேஸட்டுகள் பிரபலமாகிக்கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் இது -
நமது நண்பர் இவரது குழுவினரை மலேஷியா அழைத்துச்சென்று பட்டிமண்றம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார், இவரிடம் ஒப்பந்தம் போட்டு தேதி முடிவு செய்து அங்கு அரங்குகள் தயார் செய்து விளம்பரம் செய்து டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுவிட்டு கிளம்பும் நாட்களுக்கு முன்பு நடந்த கூத்துபற்றிக் கூறினார்-
லியோனிக்கு இரண்டு மணைவிகள் இரண்டாவது மணைவி அமுதாவின் வீட்டில் இருந்துகொண்டு லியோனி இவரை அழைத்திருக்கிறார், இவரும் தனது குழுவினருடன் சென்றபொழுது எனது மணைவியும் மலேஷியா வரவேண்டுமென்று விரும்புகிறார் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார், என்ன சார் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பனும் இப்ப எப்படி திடீர்னு விசா, டிக்கெட்லாம் ரெடிபண்ண முடியும் என்று கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாது அவர் வந்தால்தான் நான் வருவேன் என்று கூறிவிட்டாராம் -
இவர்களும் அலைந்துதிரிந்து பார்த்துவிட்டார்கள் ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை, கிளம்பும் நாளும் வந்தது இவர்களும் வீட்டில் சென்று (சின்னவீட்டில்தான்) கெஞ்சுகிறார்கள் மனிதன் மசியவேயில்லையாம், அந்தப் பெண்மணியும் ஹிஸ்டீரியா பேஷண்ட் போலக் காட்டுக்கத்தல் கத்துகிறாராம், கடைசியில் அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகளெல்லாம் வீணாகிவிடும் டிக்கெட் எடுத்தவர்கள் இழப்பீடு கேட்டால் பெருத்த நஷ்டம் வரும் என்று ஒவ்வொன்றாக எடுத்துரைத்து கடைசியில் லியோனிகூட சரி கிளம்பலாம் என்ற மூடிற்கு வந்தபிறகு நடந்ததைத்தான் என்னால் நம்பவே முடியவில்லை -
லியோனி அந்தப் பெண்ணிடம் சரி, வேறு வழியில்லை நான் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியவுடன் பேய்பிடித்தது போல ஆவேஷமான அந்தப் பெண்மணி லியோனியை எட்டி உதைத்துவிட்டு காட்டுக்கத்தலாகக் கத்தியபடி அணைவர் முன்னிலையிலும் சேலையைத் தூக்கி வீசிவிட்டு ஜாக்கெட்டைக் கிழித்துக் கொண்டு அரை நிர்வாணமாக ஆவேஷமாக நிற்கிறாராம் -
மணைவியின் ஆட்டத்திற்கு அடங்கிப்போன லியோனி மீண்டும் முருங்கைமரம் ஏற, நமது நண்பரின் குழுவினரும் தங்கள் பங்கிற்கு ஏண்டா வெங்காயம் வெளையாட்டு ஹேரா பண்ணிகிட்டு இருக்கேன்னு நாலு சாத்து சாத்தி தூக்கிகிட்டுப் போய்ட்டாங்களாம் -
இவன்தான் இன்னைக்கி நம்ப பாடநூல்கழகத் தலைவன்-

No comments:

Post a Comment

லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை   13 Oct 2023 04:48 AM சென்னை:  சென்னை மற்றும் ...