ராஜாஜி மகள் லக்ஷ்மி காந்திஜி மகன் தேவதாஸ் திருமணம்
--------------------------------------
பெரியாரிஸ்டுகள் " எல்லாப் புகழும் பெரியாருக்கே" என்ற புதிய தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ராஜாஜி மகள் லக்ஷ்மி,காந்திஜி மகன் தேவதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே காதல் அரும்பி விடுகிறது. முதலில் இரண்டு பக்கப் பெற்றோர்களுக்கும் இது நிலைத்து நிற்கச் கூடிய அன்பு தானா அல்லது வெறும் கவர்ச்சி தானா என்று சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஐந்தாண்டுகள் இருவரையும் நேரில் சந்திக்கக் கூடாது , கடிதம் எழுதிக் கொள்ளக் கூடாது என்று பிரித்து வைத்துச் சோதனை செய்தார் மகாத்மா. அந்தச் சோதனையில் வெற்றி பெற்று அவர்களுடைய திருமணம் புனாவில் 16 ஜூன் 1933 ல் நடைபெற்றது.அப்போது மணமக்களுக்கு காந்திஜி அளித்த அறிவுரை , தேவதாஸுக்கு குஜராத்தியிலும், லக்ஷ்மிக்கு இந்தியிலும் அமைந்தது. அதனைக் குறிப்பெடுத்து மகாதேவ தேசாய் வெளியிட்டார். அற்புதமான அந்த ஆசியுரை காந்திஜியின் முழுத் தொகுப்பில் கிடைக்கிறது.அதன் சுட்டி பின்னூட்டத்தில்.
பெரியாரிஸ்டுகளின் , ஆசிரியர் வீரமணி அவர்களின் உருட்டுகளுக்குத் திருவாளர் Pakshirajan Ananthakrishnan அவர்கள் அளித்த மறுமொழியின் லிங்கும் பின்னூட்டத்தில் உள்ளது.. சரியான திருமண நாள் 16 ஜூன் 1933. அப்போது ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒரு வயதுக் குழந்தை. எனவே பெரியார் அப்போது என்ன செய்தார் என்று அவர் கூறுவது எல்லாம் நல்ல கற்பனையே.
பொறுமையாகப் படித்து இந்தத் திருமண நிகழச்சிக்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிக
உண்மையில் என்ன நடந்தது என்பதை ராமசந்திர குஹா போன்றோர் எழுதிய காந்தியார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்
ராஜாஜிக்கு கிருஷ்ணசுவாமி, ராமசுவாமி, நரசிம்மன் என மூன்று மகன்கள் மற்றும் நாமகிரி, லஷ்மி என இரு மகள்கள்
இந்த நாமகிரிதான் இளம் வயதிலே விதவையானார் கடைசிவரை அவர் மறுமணம் புரியவில்லை, அய்யா ராம்சாமி ஏன் அவர் வாழ்க்கையில் ஒளியேற்றவில்லை என்பது தெரியவில்லை
ராஜாஜியின் கடைசி மகள் லட்சுமிக்கும் காந்தியாரின் கடைசி மகன் தேவதாஸ் காந்திக்கும்தான் காதல் மலர்ந்தது, ஆனால் இரு விஷயங்கள் குறுக்கிட்டன
முதலில் சாதி ராஜாஜி பிராமணர் என்பது கழகத்தார் தயவால் ஊர் அறிந்தது, காந்தி பிராமணர் அல்ல
இரண்டாவது விஷயம் பெண்ணின் வயது
பெண்ணுக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது, காந்தி மகனுக்கோ வயது 28
காந்தி இந்த இடத்தில் ஒரு ஏற்பாட்டை செய்தார், பெண்ணுக்கு 20 வயதாகும் பொருட்டும் இந்த காதல் வலுபபெறும் பொருட்டும் ஐந்துவருடம் காத்திருக்க சொன்னார், இருவரும் சந்திக்க கூடாது என உத்தரவுமிட்டார்
பின் ஐந்து வருடம் கழித்து திருமணம் நடந்தது, அவர்கள் வாழ்ந்தார்கள். கலப்பு திருமணமாக அது அமைந்தது அய்யா ராம்சாமி வாழ்த்தினாரா என்பது பற்றி தகவல் இல்லை
இந்த திருமணம் நடந்தபின் மகளை காட்டி காந்தி குடும்பத்தில் புகுந்தார் ஆரிய ராஜாஜி, காந்தி மூலம் தேசத்தை கைபற்ற சதிசெய்கின்றார் என கழகத்தார் சொல்லி கொண்டார்கள், அய்யா ராம்சாமியும் கேட்டு கொண்டேதான் இருந்தார் அது வேறுவிஷயம்
சரி, இங்கே எழும் விஷயம் ராஜாஜியின் இன்னொரு விதவை மகளுக்கு ஏன் அய்யா ராம்சாமி மணம் முடித்துவைக்கவில்லை, அதெல்லாம் பதில் இல்லை
அதாவது கழகத்தாருக்கு எதுவுமே தெரியாது ராஜாஜியின் விதவை மகளையும் இன்னொரு மகளையும் போட்டு குழப்பியிருக்கின்றார்கள், இவ்வளவுதான் கழகம் கண்ட வரலாறு
கொஞ்சமும் வரலாறு தெரியாது, நடந்தது தெரியாது, சும்மா அள்ளிவிடுவதன் பெயர் கழகம்
இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கதக்கது, அந்த காதலர்களை காந்தி ஐந்துவருடம் பிரித்துவைத்தபோது அனுமான் போல இவர்களுக்கு தூது சென்றவர் யார்?
அதைத்தான் தேடிகொண்டிருக்கின்றோம், கழகத்தாரிடம் கேட்டாலும் தெரியவில்லை, தெரிந்தாலும் சொல்லமாட்டார்கள்
"லட்சுமி - தேவதாசின் திருமணத்தில் பெரியார் அய்யாவின் பங்கு என்னென்று கேட்டோம். இராஜாஜி அவர்கள் முதலில் அத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். காந்தியாரும் தயங்கினார். பெரியார் ராஜாஜியின் உற்ற நண்பர் என்ற முறையில் சமூக மாறுதல்களை மனம் கோணாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நட்பு முறையில் ஆலோசனை கூறினார். '
முதலில் லட்சுமி -தேவதாஸ் காதல் நேர்ந்த போது வீரமணி அவர்கள பிறக்கவே இல்லை. அது நடந்தது 1927. இவர் பிறந்தது 1933. இவருக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்ட காலகட்டத்தில் இது மிகப் பழைய செய்தி. எனவே இதைப் பற்றி விவாதங்கள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பே இல்லை.
இவரிடம் பெரியார் சொல்லியிருக்கலாம் என்று பெரியாரிய தொண்டர்கள் வாதம் செய்யக் கூடும்.
அவ்வாறு சொல்லியிருந்தால் அது குறைந்தது 70 வருடங்களுக்கு முன்னால் இருந்திருக்க வேண்டும்.
இதன் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியது. மேலும் பெரியார் அந்த காலகட்டத்தில் என்னால்தான் எல்லாம் நடந்தது என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஜின்னாவிற்கும். அம்பேத்கருக்கும் காந்திக்கும், நான் தான் அறிவுரை கூறினேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். இவற்றின் உண்மைத்தன்மை கிட்டத்தட்ட சூன்யம்.
தேவதாஸ் லட்சுமி காதல் பற்றி ராஜாஜி என்ன நினைத்தார் என்பதை ராஜ்மோகன் காந்தி குறிப்பிடுகிறார். அவர் இவர்கள் மகன்.
He liked Devadas greatly, and the idea of an alliance between his daughter and Gandhi’s son must have thrilled him. Yet, arranged rather than love marriages were the norm around him.
Moreover, Devadas was not a Brahmin. Even more importantly, in the autumn of 1927 Lakshmi was only fifteen. C.R. discussed the matter with his daughter and also with Gandhi. Lakshmi told her father, as C.R. would later relate to the author, that while she would not marry Devadas without her father’s permission, he should not expect her to marry anyone else.
Caste was not a serious issue with either C.R. or Gandhi, but Lakshmi’s age was. The two fathers wanted to be sure that it was true love rather than infatuation. Lakshmi was told by her father and also by Gandhi that she should test the truth of her love. No doubt most Indian girls were married by the time they were her age, but she should wait. And while she waited, there should be no contact — no meetings and no letters.
காந்தி இதை முதலில் அணுகிய விதம் வேறுவிதமாக இருந்தது என்று தெரிகிறது. அவர் இது வெறும் பாலியல் கவர்ச்சி உண்மையான காதல் அல்ல என்று நினைத்தார். அவருடையம் எழுத்துகளில் நான் பார்த்த அளவில் இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரே ஒரு கடிதம் இருக்கிறது. நவம்பர் 27, 1927; சுரேந்திராவிற்கு எழுதியது: Devdas’s state is extremely pitiable. Rajaji is not likely at all to let him marry Lakshmi, and rightly so. Lakshmi will not take one step without his consent. She is happy and cheerful whereas Devdas has gone mad after her and is pining for her and suffering…
His thoughts run after sex-pleasure. Since he cannot see this clearly, it consumes him secretly.
இதற்குப் பிறகுதான் அவர்கள் இருவரும் சில வருடங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் தேவதாஸ் லட்சுமி காதல் பொதுவெளியில் வந்திருக்க வாய்ப்பில்லை. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின்பே செய்தி வெளியில் வந்தது. கோபாலகிருஷ்ண காந்தி தன்னுடைய ‘காந்தி தேவதாஸுக்கு எழுதிய கடிதங்கள்’ புத்தகத்தில் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களில் எம்.சி. ராஜா அவர்களைக் குறிப்பிடுகிறார்.
இந்த திருமணத்தை சனாதனிகள் அவதூறு செய்தார்கள் என்று காந்தி நேருவிற்கு எழுதிய கடிதம் (எராவாடா சிறையிலிருந்து 15 பெப்ருவரி 1933) ஒன்றில் குறிப்பிடுகிறார்:
The fight against sanatanists is becoming more and more interesting if also increasingly difficult. The one good thing is that they have been awakened from long lethargy. The abuses they are hurling at me are wonderfully refreshing. I am all that is bad and corrupt on this earth. But the storm will subside. For I apply the sovereign remedy of ahimsa no retaliation. The more I ignore the abuses, the fiercer they are becoming. But it is the death dance of the moth round a lamp. Poor Rajagopalachari and Devdas! They are also in for it. They are dragging out the engagement with Lakshmi and weaving round it foul charges. Thus is untouchability being supported!
எனவே நமக்கு கிடைத்த எந்த ஆதாரத்திலும் பெரியாரின் பங்கு இந்த்த் திருமணத்தில் இருந்த்து என்று சொல்ல முடியாது.
90 வயதான திரு வீரமணி எழுபது வருடங்களுக்கு முன்னால் அவர் கேட்டிருக்கக் கூடியதைச் சொன்னதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு ஆட்டம் போட பெரியாரியக் கோமாளிகளால் மட்டுமே முடியும்.
அரையணா அறிஞர்களாலும் முடியும். இது தொன்மம் என்றும் சொல்லக் கூடும்!
ராஜாஜியும் அவரது மூத்த மகளான நாமகிரிஅவர்களும் படத்தில்.
தேவதாஸை மணந்தது ராஜாஜியின் இரண்டாவது மகள் லக்ஷ்மி.
படத்தில் பார்க்கிறீர்கள் திருமதி நாமகிரி தலையில் முடியுடன் தான் இருக்கிறார். இவர் மறுமணம் செய்ய விரும்பாமல் ராஜாஜிக்கு சேவை செய்து வாழ் நாளைக் கழித்தார்.
பெரியாரிஸ்டுகள் விநோதமாக சிந்தித்துப் புதிது புதிதாக புருடா விடுகிறார்கள்.
பெரியார்-ராஜாஜி -ராஜாஜியின் மகள் சம்பந்தப்பட்ட புது உருட்டு :
இந்த ஆண்டு பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் ராஜாஜி,மற்றும் அவரது மகள் சம்பந்தப்பட்டு ஒரு புதுப் பொய்த் தகவல் முகநூலில் ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. அது இதுதான்.
//மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வ்யதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம்.எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். அதன் பின் காந்தியிடம் பெரியார் இந்த தகவலை சொல்லி, மறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். காந்தியும் ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தனது பையன் தேவதாஸ் காந்திக்கு (ஹிந்தி பிரச்சார சபையை நிறுவியவர்) ராஜாஜி யின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். அப்போது ராஜாஜி மகளுக்கு வயது 15. தேவதாஸ் வயது 28.5 ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் பெரியார் திருமணம் செய்து வைக்கிறார்.இவர்களுக்கு பிறந்தவர் தான் கோபால கிருஷ்ண காந்தி. (குடியரசு தலைவர் தேர்தலில் எங்களால் நிறுத்தப்பட்டவர்)இப்படி சனாதனிகளுக்கு கூட பெரியார் தேவை படுகிறார்.இன்று பிராமணர் சமுதாயத்தில் சனாதன தர்மத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அதிக அளவில் மறுமணம் நடக்கிறதே அதற்குக் காரணம் இதே பெரியார் தான்.//
உண்மை என்ன? ராஜாஜிக்கு 3 மகன்கள் 2 மகள்கள். வரிசைப்படி 1.கிருஷ்ணசுவாமி
2.ராமசுவாமி
3.நாமகிரி - 1906
4.நரசிம்மன் -1909
5.லஷ்மி -1912
முதல் இரு மகன்கள் பிறந்த ஆண்டுகள் தெளிவாகத் தெரியவில்லை. அநேகமாக 1902-1905க்குள் இருக்கலாம்.இவர்களில் மூன்றாவதாக சொல்லப்பட்ட நாமகிரி எனும் மகளுக்கு 1921ம் ஆண்டு,அவரது 15வது வயதில் திருமணம் செய்யப்பட்டிருக்கிறது. கணவர் பெயர் வரதாச்சாரி. அவரது கணவர் வரதாச்சாரி, அநேகமாக 1932ல் இறந்து விடுகிறார். அதன் பின் நாமகிரி மறுமணம் செய்து கொள்வதில்லை.ஏன் எதனால் என்ற விபரங்கள் ஏதும் தெரியவில்லை. அது அவரது சொந்த விருப்பமாக இருக்கலாம்.மேலும் அவர் அந்தக் கால வழக்கப்படி வைதவ்யக் கோலம் பூண்டாரா என்பது பற்றியும்,நானறிந்தவரை எங்கேயும் எந்த விபரங்களும் இல்லை.ராஜாஜியுடனேயே அவர் வாழ்ந்து வருகிறார்.
காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர், ராஜாஜியின் கடைசி மகள் லக்ஷ்மி.அவருக்கும் தேவதாசுக்கும் இடையே தான் காதல் மலர்கிறது. அப்போது லக்ஷ்மிக்கு வயது 15.தேவதாஸ் காந்தியின் வயது 28.இந்தக் காதலுக்கு ராஜாஜிக்கும் காந்திக்கும் சாதி ரீதியான எதிர்ப்புகள் ஏதும் கிடையாது.ஆனால்,லக்ஷ்மியின் வயதை முன்னிட்டும்,அது உறுதியான காதல் தானா என்பதை பரிசோதிக்கவும் அவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் பார்க்காமலும், கடிதங்கள் கூட பரிமாறிக் கொள்ளாமலும் ஒரு 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்றும்,அதன் பின்னும் தங்கள் காதலில் அவர்கள் உறுதியாக இருந்தால் அதன் பிறகே திருமணம் என்றும் காந்தி நிபந்தனை போட்டு விடுகிறார்.ராஜாஜியும்,லக்ஷ்மியும் தேவதாசும் ஒப்புக் கொள்கிறார்கள்.அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு 1933ல் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் பிள்ளைகள் தான், புகழ்பெற்ற மூன்று மகன்களான,ராஜ் மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி மற்றும் மகளான தாரா காந்தி பட்டாச்சார்யா ஆகியோர்.தேவதாஸ் காந்தி தனது 57வது வயதில் ஆகஸ்ட் 1957ல் காலமாகிவிடுகிறார்.
உண்மை இப்படியிருக்க ராஜாஜியின் 2 மகள்களையும் ஒன்றாக எண்ணி குழப்பிப் பெரியாருக்கு ஒரு பொய்யான பெருமையை சேர்க்க ஏதேதோ கதை கட்டி விடுகிறார்கள் அவரின் இன்றைய ஆதரவாளர்கள்.அதில் சில பேராசிரியர்கள் எல்லாம் அடக்கம்.என்னத்தச் சொல்ல?
ஆனால், இதைப்பற்றி எழுதலாம் என்று தெரிந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சில தகவல்களை அறிந்து கொள்ளவும் இணையத்தை நாடினால்,ராஜாஜியின் குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் எதுவுமே முழுமையாக அதில் இல்லை.அவரது மகன்களில் ஒருவரான .சி. ஆர்.நரசிம்மன் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.2 முறை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்,ராஜாஜி சுதந்திர கட்சி தொடங்கிய பின்னரும் காங்கிரஸிலேயே இருந்தார் என்றும்,1967 தேர்தலில் திமுகவின் கே.ராஜாராமிடம் தோற்றார் என்பவை தெரிந்த விஷயங்கள்தாம். ராஜாஜி 1972ம் ஆண்டு இறக்கையில் அவரது அருகிருந்தவர் அவர்தான்.1989ல் 80 வயதில் அவர் காலமாகியிருக்கிறார்.
மற்றபடி ராஜாஜியின் முதல் இரு மகன்கள்,கிருஷ்ணசுவாமி, மற்றும் ராமசுவாமி,இரு மகள்கள் நாமகிரி மற்றும் லக்ஷ்மி (இத்தனைக்கும் இவர் ஒரு பிரபலஸ்தரின் மனைவி மற்றும் பிரபலஸ்தர்களின் தாயார்)ஆகியோர் பற்றிய விபரங்கள் ஏதும் கிடைப்பதில்லை.முதலிரண்டு மகன்கள் இருவருமே ராஜாஜிக்கு முன்னரே காலமாகிவிட்டனர் என்று நினைக்கிறேன். உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதே போல ராஜாஜி இறக்கும்போது அவரது மகள்களில் ஒருவராவது உயிரோடு இருந்தார்களா என்றும் தெரியவில்லை.ராஜ்மோகன் காந்தி எழுதிய 'ராஜாஜியின் கதை' எனும் வாழ்க்கை வரலாற்று நூல் என்னிடம் உள்ளது.ஆனால்,அதிலும் இந்த விபரங்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் தனியாக இல்லை.இவற்றை அறிய முழு நூலையும் படிக்க வேண்டும் போலுள்ளது. ஏற்கனவே ஒரு முறை நான் முழுதையும் ஒரு 15-20 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். ஆனால் இந்த விபரங்கள் ஏதும் நினைவில் இல்லை.
ராஜாஜியின் குடும்பத்தின் முழு விபரங்களும் எளிதில் கிடைக்கும் படி இணையத்தில் ஏற்றப்பட்டால் தான்,மேலே சொன்ன மாதிரியான பொய்ப் பிரச்சாரங்களை எளிதில் எதிர் கொள்ள முடியும்.விபரங்கள் ஏற்கனவே இருந்தால் அவற்றுக்கான சுட்டிகளை நண்பர்கள் தரலாம். இல்லையெனில் அவற்றைப் பதிய முயற்சிகள் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
No comments:
Post a Comment