Sunday, September 28, 2025

மதுரை சொத்து வரி ஊழல் - FIR-ல் மோசடி

  *ஊழல் ஆட்சியில் FIR-லும் மோசடி‘’..!*

மதுரை மாநகராட்சியில் நடந்த சுமார் 200 கோடி மதிப்பிலான  சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மேயர் திருமதி. இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக அரசு சார் கணினியின் வரி விதிப்பு தொகையில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் இது போன்ற நிதி மோசடித் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மிக முக்கியமாக IPC பிரிவுகள்  120B ( கூட்டுச் சதி), 420 (மோசடி), 471 (அரசு சார் ஆவணங்களில் மோசடி), மற்றும் PC Act (ஊழல் தடுப்புச் சட்டம்) ஆகியவையின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த குற்றத்தின் வீரியத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக மேற்கூறிய எந்த ஒரு பிரிவையும்  FIR இல் சேர்க்கப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.


மேற்கூறிய IPC  120B, 420, 471 பிரிவுகள் மற்றும் PC Act  ஆகியவையின் கீழ் வரும் குற்றங்கள் PMLA Act-

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் scheduled offence - ன் அட்டவணையில் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முகாந்திரம் ஆகிவிடும் என்கிற காரணத்தால், பெயருக்கு 465, 466, 468, 477 ஏ மற்றும் ஐ.டி. சட்டங்களின் பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அமலாக்கத்துறையிடம் இருந்து காக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்திருப்பதே ஒரு மோசடிதான். 

ஏற்கனவே அமலாக்கத்துறையின் பிடியில் பல தி.மு.க அமைச்சர்கள் சிக்கி இருக்கும் நிலையில், மேலும் ஒரு அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்த தி.மு.க., வெகு சாமார்த்தியமாக இந்த FIR-ல் குற்றத்திற்கேற்ப பிரிவுகளை சேர்க்காமல் விட்டிருக்கிறது. 

கீழ்நிலையில் இருக்கும் சில ஊழியர்களை காப்பாற்றவே இந்த மெனக்கெட்டிருப்பதாக தெரியவில்லை; சம்பந்தப்பட்டிருக்கும் மேல் மட்டத்திலிருப்பவர்கள் நோக்கி அமலாக்கத்துறை வந்துவிட கூடாது என்பதற்காகவே FIR இல் இந்த மோசடி நடந்திருக்க வேண்டும்  என்ற ஐயம் எழுவதை  தவிர்க்க இயலவில்லை.

எனவே தமிழக காவல்துறை டி.ஜி.பி மற்றும் காவல்துறை மந்திரியான முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் , குற்றத்திற்கேற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம்.

 விஞ்ஞான முறையில் ஊழல் செய்து அதிலிருந்து விஞ்ஞான முறையில் தப்பிக்கவும் முயற்சிக்கிறது திமுக. கண்ணகி நீதி கேட்ட மதுரையில்,  இந்த அநீதிக்கும் நீதி கிடைக்குமா..?

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை நினைவில் கொள்க மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே ..!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு; சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை செய்த சுப்ரீம் கோர்ட்

மதுரை மாநகராட்சி விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட தேவையில்லை – சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் சொத்து வரி தொடர்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் மற்றும் கணக்கீட்டில் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. ஆனால், தமிழக அரசு இதை குறைத்து காட்டி, வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்ததாகக் கூறுகிறது. அந்த தொகைக்கு மட்டும் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் பெரும் அளவில் ஊழல் நடந்திருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று (செப்டம்பர் 8) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.

“இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. அதனால், உச்சநீதிமன்றம் இப்போது தனியாக தலையிட தேவையில்லை,” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு முடிவுக்கு வந்துள்ளது.


No comments:

Post a Comment

திருக்குறள் பல ஏடுகள், பல உரைகள், பல பதிப்புகள்

  திருக்குறள் இன்று நம்மிடம் வரும் போது முப்பால் தவிர இயல் பிரித்து வருகின்றன, இவை பெரும்பாலும் மு.வ. அமைப்பை பின்பற்றுகின்றன. இதில் அறத்துப...