Tuesday, September 30, 2025

ஐ.ஜி.​ பொன்​ மாணிக்​கவேல் IPS மீதான CBI வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

ராஜராஜன் மற்றும் பல சிலைகள் மீட்ட ஐ.ஜி.​ பொன் மாணிக்கவேல் மீதான CBI வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 

https://www.hindutamil.in/news/tamilnadu/1378014-case-against-pon-manickavel-dismissed.html

மதுரை: சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, பொன்​ மாணிக்​கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் டிஎஸ்பி காதர்​பாட்சா மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், பொன்​ மாணிக்​கவேல் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கு​மாறு சிபிஐ-க்கு உத்​தர​விட்​டது. அதன்​பேரில், அவர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, மதுரை மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தது.

இதற்​கிடையே, தன் மீது பதிவுசெய்​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், வழக்​கின் குற்​றப்​பத்​திரிகை நகலை தனக்கு வழங்க உத்​தர​விடு​மாறும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொன்​ மாணிக்​கவேல் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி மஞ்​சுளா பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: மனு​தா​ரருக்கு எதி​ராக சிபிஐ பதிவுசெய்த குற்​றச்​சாட்​டில் போது​மான தகவல்​கள் இல்​லை. எனவே, அவர்​கள் தாக்​கல் செய்த குற்​றப்​பத்​திரிகை ஏற்​றுக்​கொள்​ளக்​கூடிய​தாக இல்​லை. இதனால், முதல் தகவல் அறிக்​கை​யும் தேவை​யில்​லாதது.

சிலை திருட்டு தொடர்​பான வழக்​கு​களில் சிறப்​புக் குழு எடுத்த முயற்​சியை சீர்​குலைக்​கும் எந்த திட்​டத்​தை​யும் அனு​ம​திக்க முடி​யாது. முதல் தகவல் அறிக்கை மற்​றும் குற்​றப்​பத்​திரிகை ஆகிய இரண்​டும் மனு​தா​ரருக்கு எதி​ராக சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்​டு​களை நிலைநிறுத்த எந்த ஆதா​ரங்​களை​யும் வெளிப்​படுத்த​வில்​லை.

இது​போன்ற ஆதா​ரமற்ற குற்​றப்​பத்​திரி​கைகளை அனு​ம​திக்​கும் ​பட்​சத்​தில். ஒவ்​வொரு வழக்​கை​யும் விசா​ரிக்​கும் அதி​காரிக்கு எதி​ராக ஒரு கும்​பல் கிளம்​பும்.  விசா​ரணைக் குழு​வினர் சேகரித்​து, நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த தகவல்​களை அந்த கும்​பல் அழிக்க முயற்​சிக்​கும். இத்​தகைய ஆரோக்​கியமற்ற போக்​கு, நிச்​சய​மாக நீதி​யின் நலனைப் பாதிக்​கும்.

மனு​தா​ரர் மீது புகார் அளித்​த டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை வழக்கு தற்​போது வரை நிலு​வை​யில் உள்​ளது. அப்​படி இருக்​கும்​போது மனு​தா​ரர் மீது வழக்​குப் பதிவு செய்​ததும், அதன்​பேரில் குற்​றப்​பத்​திரி​கையை கீழமை நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​ததும் ஏற்​புடையதல்ல. எனவே, பொன்​ மாணிக்​கவேல் மீது பதி​வான வழக்கு மற்​றும் குற்​றப்​பத்​திரிகை ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​விட்​டார்.

No comments:

Post a Comment

ஐ.எஸ்.,ஐ.எஸ்., ஆட்சேர்ப்பு செய்த கோவை அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா( இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில்) 8 ஆண்டுகள் கடுங்காவல்

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை நமது நிருபர்   UPDATED : செப் 30, 2025    https://www.dina...