இது எல்லோருக்குமான பதிவல்ல. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதாவது #NRI மீது வன்மத்தை கொட்டுபவர்களுக்கு மட்டும்.
-----
எத்தன பேர் லஞ்சம் குடுத்து வெளிநாட்டு விசா வாங்கி வேலைக்கு போனான்?
இன்னும் கொஞ்ச நாள்ல லஞ்சம் குடுத்து லஞ்சம் வாங்கி வாழுடா னு அதையும் நார்மலைஸ் ஆக்கிடுவானுக...
வெளிநாட்டுல வேலைக்கு போன அத்தன பேரும் அங்கயும் வரி கட்றான், இந்தியாவுக்கும் வரி கட்றான்... திட்றவங்கள்ல எத்தன பேர் வரிகட்றான்???
வெளிநாட்டுல வேலைக்கு போன அத்தன பேரும் அங்க அரசாங்க பள்ளில பிள்ளைங்கள படிக்க வைக்கிறான்... திட்றவங்கள்ல எத்தன பேர் பிள்ளைங்க அரசாங்க பள்ளில படிக்குது???
இப்டியே ஆஸ்பத்திரி, இன்சூரன்ஸ் னு வரிசையா பேசலாம்...
வெளிநாட்ல வேலைக்கு போற/போன வங்கள்ல பெரும்பாலான பேருக்கு திரும்பி வரணும்னு தான் ஆசை. ஆனா அடுத்த தலைமுறைக்காக அது நடக்குறதில்ல. இதெல்லாம் சொன்னா புரியாது. புசிஞ்சாலும் வீம்பா திட்றவங்கள பாத்தா, ஒன்னு தான் புரியுது. ஒருகாலத்துல முயற்சி பண்ணி, கெடைக்காம போயிருக்கு...
No comments:
Post a Comment