கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் ஒரு சிறு குழந்தையின் புகைப்படத்தை திமுகவைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில் விஜய் கட்சி அபிமானி ஒருவர் தகாத வார்த்தையால் கமெண்ட் செய்திருக்கிறார். உடனடியாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் பலவாறாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனாலும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர் போக்சோ சட்டப்படி கதை செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல்.
சமூகவலைதளத்தில் கட்டாப்பாடற்ற சுதந்திரம் இருக்கிறது தான். ஆனால் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒரு சிறு குழந்தை திமுக கட்சித் துண்டுடன் இருக்கும் போட்டோவைப் பார்த்து இப்படி ஒரு கமெண்ட் போடும் அளவுக்கு இவர்களுக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கிறது. இவர் மட்டுமல்ல ஏற்கனவே திமுக சார்பு நபர்களுடன் நட்பில் இருந்தவர்கள் இன்று சண்டை போடுகின்றனர். பிரபலமான டாக்டர் ஒருவர் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துப் போட்டு, அதில் இருந்த பெண்ணைப் பற்றி தவறாக கமெண்ட் செய்ய, அதுவும் இப்போது வழக்காக மாறியிருப்பதாக தகவல்.இனி வரும் நாட்களில் விஜய் கட்சியினர் தொடர்ச்சியாக கைது செய்வதை காணலாம். அதுவும் குறிப்பாக பெண்களை அவமதித்த வழக்கில் தான் கைது செய்யப்படப் போகிறார்கள். அதையே ஒரு நெரேட்டிவாக செட் செய்து விடுவார்கள்.
திமுகவைப் பற்றி தெரியாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள். சமூக வலைதளங்களில் கொஞ்சம் அடக்கத்துடன் இருப்பது நன்மை பயக்கும்
No comments:
Post a Comment