ஒரு காலத்தில் கம்யூனிஸ்டு என்றால் அவன் படித்து விட்டுச் சொல்வான், சொல்வது அனேகமாகச் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் இழந்து வெகுநாட்கள் ஆகி விட்டன. இது தீக்கதிரில் வந்தது என்று நண்பர் ஒருவர் பதிவு செய்தது;
"கோவையில் வாழ்ந்த ஜி.டி.நாயுடு விஞ்ஞானி மட்டுமல்ல, மிகச்சிறந்த வாசிப்பாளரும் கூட. ராதாகிருஷ்ணன் கமிட்டி, லட்சுமணசாமிமுதலியார் கமிட்டி ஆகிய 2 கல்விக்குழுக்களில் கல்வி தொடர்பான தன் எண்ணங்களை தைரியமாக முன்வைத்தவர் ஜி.டி.நாயுடு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நூலகம் வேண்டுமெனவும், பள்ளிக்கு ஒரு நூலகம் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். அது இன்று நமக்கு கிடைத்துள்ளது.அப்படிப்பட்டவர்களை உலக புத்தக தினத்தன்று நாம் நினைக்க வேண்டும். பல மேதைகளை நூலகங்களும், புத்தகங்களும் தான் உருவாக்கியுள்ளன. ‘உலக புத்தக தினம் 1928லிருந்து கொண்டாடப்படுகிறது. சர்வேண்டஸ், ஷேக்ஸ்பியர் நினைவு தினமாகவும். பல எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்டதினமாகவும், பெரிய நூல்கள் வெளிவந்த நாளாகவும் இருக்கிறது. இந்த நாளை ஸ்பெயின் அறிமுகப்படுத்தியிருந்தாலும், இந்தியாவில் சிங்காரவேலர் தான் இந்த தினத்தை கொண்டாடினார். சென்னை கன்னிமாரா நூலகத்தில் சிறிய அறையில் இந்த தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.நூலகம்புத்தக வைப்பறை மட்டுமல்ல, மாமனிதர்களை வளர்க்கும் இடம். லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் ஒரு வாசிப்பு அறை உள்ளது. அங்கு 8ம் எண் கொண்ட இருக்கை மிகப் பிரபலமானது. அந்த இருக்கையில் அமர்ந்திருந்த 2 பேர், அந்த நூலகத்தின் அனைத்து நூல்களையும் படித்தவர்கள் என்று அங்கு எழுதப்பட்டிருக்கும். ஒருவர் மாமேதை காரல் மார்க்ஸ். மற்றொருவர் சட்டமேதை அம்பேத்கர்."
1. இரண்டு குழுக்களிலும் ஜி. டி நாயுடு உறுப்பினர் அல்லர். இரண்டு குழுக்களில் அறிக்கைகளிலும் அவரது பெயர் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.
2. அவினாசிலிங்கம் செட்டியார்தான் நூலகங்களை ஊக்குவித்தவர். அவர்தான் தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அறியப்படுபவர்.
2. உலக புத்த தினம் முதல்முதலாகக் கொண்டாடப் பட்டது 1995ல்.
3. சிங்காரவேலர் தான் இந்தியாவில் முதல்முதலாகக் கொண்டாடினார் என்பதற்கு எந்த ஆதாரமும் எனக்குத் தெரிந்து இல்லை. காட்டினால் நன்றியுடைவனாக இருப்பேன்.
4. மார்க்ஸ் படித்த நூலகம் பிரிட்டீஷ் மியூசிய நூலகம். நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வேறு இடத்தில் இருக்கிறது.
5. மார்க்ஸ் அங்கே வருவார் என்ற குறிப்பு இருக்கிறது. அம்பேத்கரைப் பற்றி எந்த குறிப்பும் இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. நூலகத்தின் வலைத்தளம் கூறுவது இது: Those wanting to use it had to apply in writing and were issued a reader’s ticket by the Principal Librarian. Among those granted tickets were: Karl Marx, Lenin (who signed in under the name Jacob Richter) and novelists such as Bram Stoker and Sir Arthur Conan Doyle.
6. மார்க்சும் அம்பேத்காரும் நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் படித்து விட்டார்கள் என்று எழுதுவது சிறுபிள்ளைத்தனமானது.
ஒரு பதினைந்து வரிகளுக்குள் இத்தனை தகவல் பிழைகளோடு கட்டுரை எழுதுவதற்கு மிகவும் கடுமையாக முயன்றிருக்க வேண்டும்.
-மீள்பதிவு
https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/pfbid026Bs4jXzAwQmMD3wkgxdr35MSwGSuaeJ7ypz7yQkGmQ8XFErdrLAPPtSDs9gUbJZnl?__cft__[0]=AZXgQvaZjko261V8lCEyBRXJtzwyoMDEDtLq5yNKdEiySeSHcwU4jZ1YdNAWqvisBlpJtcRfjZJWvSmPOSEBebXkNrAyWxqQQcN7nYY4I2ILgKcl91c202HQst5AGYwVERcS3N0QH3r2mTA0DfjkPCyCqBHRXeLdZORu_5AXTPzPjGt217LkmwhWBMzumkVqqLk&__tn__=%2CO%2CP-R
No comments:
Post a Comment