Friday, October 10, 2025

தமிழகத்தில் சாதி விட்டு சாதித் திருமணங்கள்

 திராவிட இயக்கத்தின் பரப்புரைகளுக்கும் உண்மைக்கும் அதிகத் தொடர்பு இல்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமானது சாதி ஒழிப்பு. திராவிட இயக்கம் சாதி ஒழிப்பைப் பற்றி பேசிக் கொண்டே இருந்திருக்கிறது. மாநாடுகள் பல நடத்தியிருக்கிறது. ஆனால் அவற்றால் மக்களிடையே தாக்கம் அதிகம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நகரமயமாக்கலும் கல்வியும் பரவலாக ஆன பிறகு கூட தமிழகத்தில் சாதி விட்டு சாதித் திருமணங்கள், குறிப்பாக, உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்றைய சாதியினரை மணப்பதென்பது, அரிதாகத்தான் நடைபெறுகிறது. இதனால் திராவிட இயக்கம் சாதி விட்டு சாதித் திருமணங்களை ஆதரிக்கவில்லை என்ற பொருளல்ல. சாதி என்பது மக்களிடையே தந்தை, தாய், அண்ணன், தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவுகளில் ஒன்றாக்க் கருதப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. எனவே, மேடையில் முழங்குவதாலோ, அல்லது சாதிப் பிரிவினைகளைப் பற்றி காட்டமாகப் பேசுவதாலோ மக்கள் மாறப் போவதில்லை. மாறாக, சாதிகள் இட ஒதுக்கீடு, தேர்தல்கள் போன்றவற்றால் இன்னும் வலுப்பெறும் என்றுதான் சொல்ல முடியும்.

இனி புள்ளி விவரங்களுக்கு வருவோம்.
தமிழகத்தில், தோராயமாக, ஒரு வருடத்தில் எத்தனை திருமணங்கள் நடைபெறுகின்றன?
1. இந்தியாவைப் பொருத்தவரை, Crude Marriage Rate என்ற அளவீடு ஒன்று இருக்கிறது. அதன் படி 1000 பேர்களுக்கு 8-10 திருமணங்கள் நடைபெறுகின்றன.
2. தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி. எனவே தோராயமாக, வருட்த்திற்கு ஏழு லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்ளலாம்.
3. தமிழக அரசு திருமணங்களுக்காக மானியங்கள் தருகின்றது. நான்கு வகையான திருமணங்களுக்கான மானியங்கள். இதில் முத்துலட்சுமி அவர்கள் நினைவாக சாதி விட்டு சாதித் திருமணத்திற்கு 50000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப் படுகிறது. இதைத்தவிர ஒரு சவரன் 22 காரட் தங்கமும் வழங்கப்படுகிறது.
4. தமிழக அரசின் புள்ளி விவரங்களின் படி இந்நான்கு திட்டங்களின் கீழ் பயன் பெற்றவர் 2024-25ம் ஆண்டுகளில் பயன்பெற்றவர் 7963 மட்டுமே. இதில் 50% சதவீதத்தினர் சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டவர் என்று வைத்துக் கொண்டாலும் தமிழகத்தில் சுமார் 4000 திருமணங்கள் மட்டுமே மானியம் பெறுகின்றன. மானியம் பெறாமல் நடைபெறும் திருமணங்கள் இன்னொரு 4000 என்று வைத்து க் கொண்டாலும் (யாரும் மானியத்தை விடப் போவதில்லை என்பதுதான் உண்மை) இத்தகைய திருமணங்கள் வருடத்திற்கு 8000 இருந்தால் அதிசயம். அதாவது நடக்கும் திருமணங்களில் ஒரு சதவீதத்திற்கு சற்று மேல்!
இதை வைத்துக் கொண்டுதான் நாம் பெரியார் மண் சமத்துவப் பண் என்று அலறுகிறோம்.
மீண்டும் சொல்கிறேன்.
உண்மைக்கும் திராவிடப் பரப்புரைகளும் இடையே தூதர்வழித் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/pfbid02sF9nRwQ83zftJt1PHB9if7gACpuGdcAU3v57kYiBhCzUQnhMPdHLM1RYXNE4ibS9l?__cft__[0]=AZVpUZJXTzt9WPz1TkjHzCXgsV-Xdh3c96aSYztmNNVBEmfI8PRsJX3JDWkLYlfRZBe4hHVnIKvsAxEkzcTGrHGfNmceXJm23jI9o1FEO58psgG-BMiAdlzHwQpk9yUs3YGjnQ9zZ31IdTYfbv_icZnTFGvFRT_UN2d6fh2kIrTRu0HpgBHepyck6iiFMvUU6Ho&__tn__=%2CO%2CP-R

No comments:

Post a Comment

இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும்போது செவிலியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லையா? சுப்ரீம் கோர்ட்

  இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும்போது செவிலியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லையா? சுப்ரீம் கோர்ட் கேள்வி  ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண...