விடியல் DAWN பிச்சர்ஸ்- இன்பன் உதயநிதியின் "இட்லி கடை" - 104 கோடி பட்ஜெட் & விளம்பர வெளியீடு செலவுகள்- வரிகள் உட்பட வசூல் ரூ.38.6 கோடி மட்டுமே.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் “இட்லி கடை” என்ற திரைப்படத்தை 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கி திரையரங்கில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். இடைவேளையில் குழந்தைகளுக்கு பர்கர், பீட்சா மற்றும் பாப்கார்ன் போன்ற உணவுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. ஆனால், படம் மிகவும் கண்றவியாக இருந்ததால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடுவே எழுந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (அந்த அளவுக்கு சலிப்பூட்டும் படத்தை பிறர் பணம் கொடுத்து பார்க்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அமைச்சர் ஒருவர் இப்படிப் பள்ளி மாணவர்களை திரையரங்கிற்கு அழைத்து சென்று ஒரு வணிக திரைப்படத்தை பார்க்க வைப்பது தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் நடப்பதில்லை. இது கல்வி சார்ந்த அல்லது தேசப்பற்று ஊட்டும் ஆவணப்படம் (டாக்குமென்ட்ரி) என்றால் பரவாயில்லை; ஆனால் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால் இதுவே சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
“இட்லி கடை” திரைப்படத்தை தயாரித்தவர் ஆகாஷ் பாஸ்கர். இவரது இல்லத்தில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அவருடைய சொத்துக்கள் மீது சீல் வைக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் விற்பனையிலிருந்து வரும் பணப் பரிவர்த்தனைகளில் இவர் தொடர்புடையவர் என்றும், அந்த பணத்தை ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் படத்தை விநியோகித்து நாடு முழுவதும் வெளியிடுவது இன்பநிதி அவர்களின் “ரெட் ஜெயின்” நிறுவனம். இன்பநிதியின் முதல் தயாரிப்பு படமாகியதால் அது தோல்வியடையாமல் இருக்க அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இல்லையென்றால் ஒரு அமைச்சர் தேவையில்லாமல் குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் வழங்கி இப்படத்தை பார்க்க தூண்ட வேண்டிய அவசியமே என்ன?
ஒரு அரசு அமைச்சர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை சினிமா போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது முற்றிலும் தவறு. அரசு இயந்திரத்தை இப்படிப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவது சரியல்ல. மாணவர்களை ஊக்குவிக்க வேண்டியது நல்ல மதிப்புகள், தேசப்பற்று, சமூக உணர்வு போன்றவற்றை உருவாக்கும் ஆவணப்படங்களுக்கே; முழுக்க முழுக்க வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட சினிமாக்களுக்கு அல்ல.
No comments:
Post a Comment