Sunday, October 5, 2025

தமிழரிடம் வசூல் - கொள்ளை -ஈவெராமசாமியார் வழியில் கார் வாங்கி குவிக்கும் திராவிடியார்-வீரமணி

தமிழரிடம் வசூல் - கொள்ளை ஈவெராமசாமியார் வழியில் வீரமணி

https://www.facebook.com/photo/?fbid=1539306077342142&set=a.111403406799090

"பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!" என்கிற தலைப்பில் 05-10-2023 நாள் விடுதலையில் கி.வீரமணியின் அன்பு மகன் வீ.அன்புராஜ் பெருமையுடன் - தன் தந்தையார் வாங்கிய ஓசி கார்களின் பட்டியலை தந்தார். "முதன்முதலில் ஆசிரியர் அவர்களுக்கு "அம்பாசிடர்" கார் வழங்கப்பட்டது. திருச்சியில் 4 துணைவேந்தர்கள் முன்னிலையில் 1992ஆம் ஆண்டு அது வழங்கப்பட்டது. இரண்டாவது பிரச்சார வாகனம் 2000 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வழங்கப்பட்டது. மூன்றாவது வாகனம் மூப்பனார் அவர்களின் தலைமையில் 2007 ஆம் ஆண்டில் திருச்சியில் கொடுக்கப்பட்டது. நான்காவது வாகனம் 2012ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் வழங்கினார். அய்ந்தாவது வாகனம் 2017 மதுரையில் கொடுக்கப்பட்டது."

இறுதியாக இப்போது 2023ல் ஆறாவது வாகனம் திருச்சியில் தரப்பட உள்ளதாம். முதல் முதலில் தான் இனாமோ, லஞ்சமோ, பொருளோ வாங்கும்போது தான் கூச்சமாக இருக்கும். போக போக பழகிவிடும் என தான் கி.வீரமணி குறித்த கார் சங்கதியை கேள்விபட்டதும் தோன்றியது. பிறகு கொடுக்காதவனெல்லாம் எதிரியாகி விடுவான் என்பது தான் உண்மை. அன்புராசு வெளியிட்ட ஓசி வாகனங்களோடு - மேலும் 9099 என்கிற ஒரே எண்ணில் - பகுத்தறிவாதி என சொல்லி கொண்டு நியூமராலஜி அடிப்படையில் இரண்டு கார்கள் வைத்திருக்கிறிர்கள் என தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே, கி.வீரமணியிடம் கேள்வி எழுப்பினார். அதாவது மேலும் கி.வீரமணி கணக்கில் இரண்டு கார்கள் உள்ளன. ஆடம்பரங்களை வெறுக்கும் கி.வீரமணி தான், "பேன்சி எண்கள் அடிப்படையில் வைத்துள்ளதாக" கூறினார். சரி - அது அவர் பிரச்சனை.

ஆனால் இது மாதிரி அதிகப்படியான கார்களை வைத்துள்ள ஆசாமிகள் குறித்து ஈவெராமசாமி என்ன கூறினார் என தி.க.வினருக்கு எடுத்து கூற வேண்டிய கடமை நமக்குள்ளது. காரணம் - அதில் கி.வீரமணியும் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால். அந்த வகையில் கி.வீரமணியை போல் - அதிகப்படியான வாகனங்கள் வைத்துள்ள பகட்டான பேர்வழிகள் பற்றி ஈவெராமசாமி கூறியதை கி.வீரமணிக்கு எடுத்து தருகிறோம். "பெரியார் அதை சொன்னார்... இதை சொன்னார்" என சொன்னதில் பாதி, சொல்லாததில் பாதி என பேச்சில் கலந்தடிக்கும் கி.வீரமணியின் பார்வையில் ஈவெராமசாமியின் இந்த பேச்சு - பெரியார் சிஷ்யனாகி 75 ஆண்டுகளாகியும் அவர் கண்களில்படாதது மிக பெரிய ஆச்சரியம்.

ஈவெராமசாமி சொன்னது, "ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 3, அல்லது 4 மணி நேரத் தேவைக்காக உபயோகப்படும் மோட்டார் ஒரு நாளில் 20 மணி நேரம் வீணாக யாதொரு பயனுமின்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக்கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால், வீணாகப் பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.

இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்பமயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். இதற்குப் பாடுபடாது பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லையென்பது தெளிவாக்கப்பட வேண்டும். - ‘புரட்சி' ஏடு - 10.06.1934. ஈவெராமசாமி சொன்னது சரியான யோசனை தான். அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் - எவரொருவரும் சொல்லும் எத்தகைய சிறப்பான யோசனையும், சொன்னது போல் செயல்பட்டால் தான், அது மேலும் சிறப்பு பெறும். ஆனால் அதை செயல்படுத்த அன்றைக்கு ஈவெராமசாமி முயற்சித்தாரா அல்லது இன்றைக்கு 'ஆறு வண்டி' வீரமணியாவது - அதை நடைமுறைப்படுத்தினாரா என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும். பிறகெதற்கு வெட்டி பெருமைக்கு அறிவுரை வழங்க வேண்டும். தம் கட்சியை சேர்ந்தவனாலேயே பின்பற்ற வாய்ப்பில்லை என்றால் அந்த அருள்வாக்கை ஏன் அருள வேண்டும். ஈவெராமசாமியிடம் இருந்து இந்த பேச்சு, 1934ல் வெளிபட்டது. அன்றைக்கு ஈவெராமசாமியிடம் சொந்தமாக கார் இல்லாமல் இருந்திருக்கலாம். பின்னாளில் பகுத்தறிவு வியாபாரம் நன்றாக கல்லா கட்ட, கட்ட - ஒன்றுக்கும் அதிகமான கார் வாங்கி இருக்கலாம்.

ஈவெராமசாமியே சொன்னது போல், நிச்சயம் செய்திருக்க மாட்டார். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று தானே பிறவிக்குணம். கி.வீரமணியை எடுத்து கொள்வோம். அரை டஜன் வாகனங்கள் வைத்திருந்துள்ளார். முனிசிபாலிட்டிக்கு கொடுக்க வேண்டாமய்யா. தாம் குடி இருக்கும் அடையாறு தெரு மக்களுக்காக - ஈவெராமசாமி சொன்னது போல் பொது பயன்பாட்டுக்கு, ஏழை எளிய மக்களுக்கு கொடுத்திருப்பாரா? ஒரு குடும்பத்துக்கு ஒரு கார் போதுமானது. ஆனால் கி.வீரமணியிடமோ வந்ததும், வாங்கியதும் என சில, பல வாகனங்கள். இது பணம் இருக்கிற கெத்தில், வாங்கப்பட்டதே ஒழிய, இந்த ஆடம்பரத்தால் யாருக்கு என்ன நன்மை. சொந்த பணத்தில் ஊர்தி வாங்காமல், தொண்டர்கள் பணத்தில் ஜீப் வாங்கிய கி.வீரமணி, தாம் உபயோகித்த நேரம் போக, அந்த ஜீப்பை தொண்டர்கள் பயன்பாட்டுக்காவது தந்திருப்பாரா? இல்லையே. அவ்வாறாக நாம் பார்க்கவில்லையே.

அதனால் தான் ஈவெராமசாமி சொன்னது கி.வீரமணிக்கும் பொருந்தி போனதே, "பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும்" என்றது. ஈவெராமசாமியை "பொது உடைமையை பற்றி பேசச் சொன்னால் வாய் கிழிய நன்றாக பேசுவார். பேசி என்ன புரியோசனம். காரியமாகவில்லையே. காரிய மாற்றும்படி தன் விசுவாசிகளையும் தூண்டவில்லையே. "நான் சொன்னதை நானே கூட செய்யமாட்டேன். முக தாட்சண்யத்திற்காக என்னை விமர்சிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால் உன் காலத்தில் - என்னை போல் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் வாழ்ந்திரானால் பின்னிவிடுவார்கள்" என கி.வீரமணிக்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம். வழக்காததன் விளைவு - மாணவனான நாம், ஆசிரியருக்கே நாம் பாடமெடுக்க வேண்டி உள்ளது.



No comments:

Post a Comment

பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் =போலீசார் வழக்கு

  சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்ணம்….!    Oct  4,  025  சென்னை:  படித்தவர்கள் வாழும் பகு...