எஸ்ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் காலையில் தினமும் என்ற பாடலை வாலி எழுதினார். காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்று தான் முதலில் எழுதியிருந்ததார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முகம்மதிய மதத்தில் அரேபிய அல்லாஹ் தெய்வம் ஒருவனே வேறு யாரும் தெய்வம் இடத்திற்கு சமமாக இருக்க முடியாது எனவே வார்த்தையை மாற்றுமாறு கூறியதால் தான் தெய்வம் என்பதற்கு பதிலாக தேவதை என்று கவிஞர்.வாலி மாற்றியதாக தன்னுடைய நூலில் கூறி உள்ளார்
தான் இசையமைக்கும் சினிமாப் பாடலில் கூட இத்தகைய கடும் இஸ்லாமிய அடிப்படைவாத மனநிலையைப் புகுத்தும் அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உருமாறியுள்ளார் .
வாலி பதிவு: // நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.
‘காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம் அம்மா!’
– ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் –
“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.
“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன். - வாலி (நினைவு நாடாக்கள்) ஆனந்த விகடன் //
ஏ.ஆர்.ரகுமான் அம்மா முஸ்லிம் மதவெறி தமிழர் பண்பாட்டை இழிவு செய்திட்டார் கவிஞர்- பிறை சூடன்
இங்கே விபூதி குங்குமமெல்லாம் வைக்ககூடாதுனு சொன்னாங்க – ஏ ஆர் ரஹ்மான் அம்மா குறித்து பிரபல பாடல் ஆசிரியர். By Rajkumar -July 31,
தமிழ் சினிமாவில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹமான். 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், இவர் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் தான். ஏ ஆர் ரஹ்மான் – பிறைசூடன் ஆஸ்கார் விருதை வென்ற ஏ ஆர் ரஹ்மான் இதுவரை பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும் தனக்கு எதிரான கூட்டம் ஒன்று இருக்கிறதும் என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா குறித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
பாடல் ஆசிரியரான பிறைசூடன் இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். மேலும், இவர் ஏ ஆர் ரஹ்மானுடனும் பணியாற்றியுள்ளார்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது
மறுநாள் எனக்கு ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார். அப்போது ரஹ்மான் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். அதனால் யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை என்று பிறைசூடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment