Wednesday, February 24, 2021

இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் & உயிர்த்து எழுந்து வந்தார் எல்லாமே கப்சாக்களே

சுவிசேஷக் கதைகளின் கதை நாயகன் இயேசு பொஆ.30ல் இறந்து போனார். இறந்த இயேசுவை தெய்வீகர் என புனைந்திட  முதலில் வரைந்தது மாற்கு சுவிசேஷக் கதை( 70-75). அதில் சொல்லப்பட்ட கதையை எடுத்துக் கொண்டு மற்ற மூன்று சுவிசேஷ கதைகளும் எழுந்தன அதில் ஒன்று இயேசு தன்னுடைய மரணத்தையும் தான் செத்துப் போன பின் மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்து காட்சி தருவேன் என்று சொன்னதாகவும் உள்ளது அவற்றை காண்போம்.
யோனா  அடையாளம்
மத்தேயு 12:39 அதற்கு அவர் கூறியது; "இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. 4யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
 
மாற்கு 15: 25  கதைப்படி இயேசுவை ரோமன் கிரிமினலாக மரண தண்டனை தூக்குமரத்தில் தொங் ஏற்றியது  வெள்ளி காலை 9 மணி.
மாற்கு 15: 25அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. 26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட    யூதருடைய மன்னன் என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 
மாற்கு 15::33 கதைப்படி இயேசு செத்துப் போனது 3மணி வாக்கில்
மாற்கு 15:33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என பொருள்.
37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.

மாற்கு கதைப்படி வெள்ளி காலை 9 மணி முதல் மதியம் 3 வரை- 6 மணி நேரம் தூக்குமரத்தில் தொங்கினார், அதன் பின்பு ரோமன் கவர்னரைப் பார்த்து அனுமதி பெற்று  செத்த ஏசு பிண உடலை கீழே இறக்கி அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் வெள்ளி மாலை 6 மணி வாக்கில் பிணவறையில் வைத்தனர்.

ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு அதாவது சூரிய உதயம் நடந்த டன் பெண்கள் இயேசுவின் பிணவுடல் மீது சில வாசனைப் பொருள்களை   பூச சென்ற போது பிணம் இல்லை, கல்லறை காலி எமக் கதை

 மாற்கு 16:1 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர்.
 2 வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது.  

வெள்ளி மாலை 6 மணி முதல் ஞாயிறு அதிகாலை எனில் இயேசுவின் பிண உடல்  கல்லறை உள்ளே 2 இரவு, ஒரு பகல் மட்டுமே அதாவது 36 மணி நேரம் மட்டுமே இருந்தது.

மத்தேயு சுவிசேஷக் கதையைத் தழுவிய லூக்கா சுவிகதை  சுருக்கமாக யோனா பெயரை மட்டுமே கூறிவிட்டு; 3 இரவு, 3 பகல் விளக்கத்தை விட்டார் 

லூக்கா 11:  29 மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு  நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும்.

மத்தேயு 12:39 //4யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்//

இயேசு சொன்னாதாக உள்ள  மத்தேயு சுவிசேஷக் கதை அடையாளம்  அறிவோடு படிப்போர் உளறல் எனப் புரிந்து கொள்வர்  
 
இயேசு கைதின்போது சீடர்கள்  அவரைவிட்டு ஓடினர் எனக் கதை
மாற்கு 14:50 இயேசு சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51.ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52.ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். 
இயேசுவின் கைதின் போது அவரைவிட்டு தப்பி ஓடிய சீடர்கள் செத்த இயேசு சொன்னவை எல்லாம் ஞாபகம் வைத்து தந்தவை என்பதே சுவிசேஷக் கதைகள். அதில் இயேசு தான் கைதாவேன் என்பது மட்டும் இல்லாமல் மீண்டும் பழைய உடம்பில் இஉயிரோடு வந்து காட்சி தருவேன் எனவும் கூறினாராம்.
மாற்கு 14: 28ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.  
மத்தேயு கதையிலும் இது உள்ளது

மத்தேயு 26: 32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.
மாற்கின் ஈஸ்டர் காலி கல்லறை கதையிலும் இது மீண்டும் வெள்ளை உடை வாலிபர் சொன்னார் என உள்ளது
மாற்கு 16:  5 அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர். 6 ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். 7 இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

செத்துப்போன இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்து காட்சி என்பது மாற்கு 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய எந்த கிரேக்க ஏடுகளிலும் இல்லை அவை இந்த வசனத்தோடே முடிந்துவிட்டது

மாற்கு 16:8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள்பெண்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. 
 மத்தேயு சுவிசேஷக் கதையில் இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்து கலிலேயா மலையில்  மட்டுமே  காட்சி
மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17.மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள்.

 நாம் இப்போது லூக்கா சுவிசேஷக் கதைக்கு செல்வோம் 

 லூக்கா24::13 எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். 
 33பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள்.
36.  சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார். 50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.
51
இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார்.  

லூக்கா கதையில் கலிலேயாவில் காட்சி இல்லவே இல்லை, அதனால் இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்து கலிலேயா சென்று மலை மேலே சந்திப்பேன் எனச் சொன்னதும் இல்லை, எல்லாமே கப்சா. 

லூக்கா சுவிசேஷக் கதையில் இயேசு கதாநாயகர் ஞாயிறு அன்றே பரலோகம் எடுத்துச் செல்லப்பட்டார். அதே கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் கதையில் அதில் உயிர் பழைய உயிர்த்து பழைய  உடம்பில் உயிரோடு மீண்டும் எழுந்த இயேசு 50 நாள் சீடர்களுக்கு பலமுறை காட்சி தந்தார் என கதை. எல்லாமே கட்டுக்கதை தான்

No comments:

Post a Comment